ஐநாவின் உலக சுகாதார நிறுவனத்தின் நிர்வாகக்குழு தலைவராக இந்தியாவின் மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.இவருக்கு உலக நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றார்கள்.

ஐ.நா.வின் உலக சுகாதார அமைப்பின் இரண்டு நாள் மாநாடு விரைவில் நடக்க உள்ளது. உலக சுகாதார நிறுவன அமைப்பில் நிர்வாக வாரியத்தில் 34 நாடுகள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இதன் தலைவராக உள்ள ஜப்பானைச் சேர்ந்த ஹிரோக்கி நகாடானி பதவி காலம் நிறைவடைகிறது. இந்த வாரியத்தின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்காக நடந்த ஆலோசனை கூட்டத்தில் இந்தியாவின் மத்திய மந்திரி ஹர்ஷவர்தன் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மே 22-ம்தேதி பதவியேற்க உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், உலக சுகாதார அமைப்பின் நிர்வாக குழு தலைவராக இந்தியாவின் த்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் காணொலி காட்சி மூலம் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.இதன் தலைவராக தேர்ந்தேடுக்கப்பட்டவர் 3 ஆண்டுகள்  இந்த பதவியில் நீடிப்பார்.