இலவச வீடு வழங்க யாராவது பணம் கேட்டால் அவர்களை சிறையில் தள்ளவும் தயங்க மாட்டேன் அமைச்சர் துரைமுருகன் ஆவேசமாக பேசியுள்ளார்.மேலும் அதிகாரிகள் கமிஷன் கேட்டால் தயங்காமல் என்னுடைய செல்போன் எண்ணிற்கு தொடர்கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்றும் கூறியுள்ளார்.
இலவச வீடு வழங்க யாராவது பணம் கேட்டால் அவர்களை சிறையில் தள்ளவும் தயங்க மாட்டேன் அமைச்சர் துரைமுருகன் ஆவேசமாக பேசியுள்ளார்.மேலும் அதிகாரிகள் கமிஷன் கேட்டால் தயங்காமல் என்னுடைய செல்போன் எண்ணிற்கு தொடர்கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்றும் கூறியுள்ளார்.
வேலுார் மாவட்டம் காட்பாடி தாலுகா கீரைச்சாத்து பஞ்சாயத்தில் பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் , பயனாளிகளுக்கு இலவச வீடு வழங்கும் விழா நடந்தது . இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் துரைமுருகன், 36 பயனாளிகளுக்கு வீடு ஒதுக்கீடு சான்றிதழ்களை வழங்கினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் துரைமுருகன், நான் நாட்டுக்கு மந்திரினாலும் காட்பாடி தொகுதிக்கு என்றும் ஊழியனாகத்தான் செயல்படுவேன் . நமது பகுதிக்கு புதியதாக கவுன்சிலர் மற்றும் தலைவர்கள் வந்துள்ளார்கள் . தற்போது ஒவ்வொரு பஞ்சாயத்துக்கும் அரசின் இலவச வீடுகள் தொகுப்பு வழங்கபட்டு வருகின்றது.
வீடுகள் கட்ட ஏழை மக்களிடம் கொடுப்பதே 2 லட்சத்து 25 ஆயிரத்து 801 ரூபாய் மட்டும் தான் என்று கூறிய அவர் இந்த தொகை வைத்து வீடு கட்டவது சிரமம் என்றும் அதிலும் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் எப்படி எழை மக்கள் வீட்டினை கட்ட முடியும் என்று கேள்வியெழுப்பினார். மேலும் வீடு கட்டுபவர்களிடம் யாராவது பணம் கேட்டால் உடனடியாக என்னுடைய எண் 9585378888 க்கு தனிப்பட்ட செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்று அதிரடியாக அறிவித்துள்ளார்.
அதனிடையே உங்களிடம் 10 தொகுப்பு வீடுகளுக்கு ரூ.10 ஆயிரம் ,ரூ. 20 ஆயிரம் என்றும் கேட்டால் எனது செல்போன் எண்ணிற்கு 9585307888 தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். லஞ்சம் கேட்டது யாராக இருந்தாலும் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் புகார் செய்து சிறையில் அடைக்கவும் தயங்கமாட்டேன் என்று ஆவேசமாக பேசினார். முதலமைச்சர் நமது ஆட்சியில் , யாரும் லஞ்சம் கொடுத்து ஒரு செயலை செய்து முடிக்கக்கூடாது என அடிக்கடி கூறுகிறார். அதன் படியே அதிகாரிகளும் மாவட்ட நிர்வாகமும் செயல்பட வேண்டும் என்று அவர் அலோசனை கூறினார்.
மேலும் தமிழக அமைச்சராக இருப்பதால் மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களுக்கு செல்ல வேண்டியுள்ளதால் இந்த தொகுதிக்கு அடிக்கடி வர முடியவில்லை என்று தெரிவித்த அவர், இந்த தொகுதி மக்களின் குறைகளை மாவட்ட ஆட்சியர் கேட்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். மேலும் தொகுதி மக்களின் பிரச்சனைகள் தொடர்பாக எந்த நேரத்திலும் ஆட்சியர் எனக்கு தொடர்பு கொள்ளலாம் என்றும் அவர் பேசினார்.
