Asianet News TamilAsianet News Tamil

அதிகாரிகள் முறைகேடு செய்தால்.. இனி சிபிசிஐடி தான் விசாரிக்கும் ..பதற விட்ட அமைச்சர்

தமிழகத்தில் மணல் குவாரிகள் தொடங்கப்படுவது குறித்து தமிழக அரசு சார்பில் விரைவில் அறிக்கை வெளியிடப்படும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.
 

Minister Duraimurugan press meet
Author
Vellore, First Published Jan 5, 2022, 4:21 PM IST

தமிழகத்தில் மணல் தட்டுப்பாடு காரணமாக கட்டுமானப் பணிகள் துவங்கி உள்ளதாகவும் மணல் குவாரிகளை திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கட்டுமானத்துறை சார்ந்த தொழில் துறையினர் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.மேலும் அனைத்து வகை கட்டுமான பணிகளுக்கும் எம் சாண்ட் பயன்படுத்த முடியாத நிலை உள்ளதால், மணல் தேவை உள்ளது. இப்பகுதியில் மணல் கிடைக்காததால், ஏராளமான அரசு வீடுகள் மற்றும் தனிநபர் கட்டட பணிகள் முடிவடையாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன எனவும் புகார் எழுந்தது.

தமிழகத்தில் மணல் குவாரிகள் தொடங்கப்படுவது குறித்து தமிழக அரசு சார்பில் விரைவில் அறிக்கை வெளியிடப்படும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். வேலூர் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை அமைச்சர் துரைமுருகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் ஆய்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை பார்த்தால் போல வேகமாக உள்ளது எனவும் தாறுமாறாக பேருந்து நிலையத்தைக் கட்டி வருகின்றனர் என நகைச்சுவையாக கூறினார்.

புதிய பேருந்து நிலையத்தில் இரண்டு நுழைவு வாயில்கள் அமைக்கப்படும் எனவும் நுழைவு வாயில் அருகே எந்தவிதமான தடைகளும் கட்டக்கூடாது என அறிவுறுத்தப்பட்டு உள்ளதாகவும் நவீனமாக கட்டி  முடிக்கப்பட வேண்டும் எனவும் அதிகாரிகளிடம் கூறினார் மேலும் அருகில் உள்ள தனியார் இடங்களில் பாதிப்பு ஏற்பட்டு விடக் கூடாது என்ற நோக்கத்தில் கட்டுமான பணிகள் திட்டமிடப்பட்டு நடந்துள்ளதாக கூறினார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் துரைமுருகன், இனிவரும் காலங்களில் பேருந்து நிலையத்தில் அடிக்கடி ஆய்வு செய்வேன் எனவும் இதில் முறைகேடு நடப்பது தெரிய வந்தால் சிபிசிஐடி மூலம் விசாரணை நடத்தப்பட்டு தவறு செய்த அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். வேலூர் கிரீன் சர்க்கில் இருக்கும் வரை அந்த இடத்தில் போக்குவரத்து நெரிசல் தீர்க்க முடியாது எனக் கூறிய அமைச்சர், அப்பகுதியில் பகுதியில் உணவகங்கள் முன்பாக வாகனங்களை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தமிழகத்தில் மணல் குவாரி திறக்கப்படுவது குறித்து தமிழக அரசு விரைவில் அறிவிப்பு வெளியிடும் எனவும் தமிழகத்தில் எந்த பகுதியிலும் அனுமதியில்லாமல் தற்போது கல்குவாரிகள் இயங்கவில்லை எனக் கூறினார். மேலும் வேலூர் சிஎம்சி மருத்துவமனை மேம்பாலம் அமைப்பது குறித்து நீண்ட நாட்களாக பரிசீலிக்கப்பட்டு வருகிறது என தெரிவித்த அமைச்சர் , வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் காங்கேயநல்லூர் இடையே பாலாற்றில் பாலம் அமைப்பது குறித்து ஏற்கனவே திட்டமிடப்பட்டு உள்ளது எனவும் அந்த இடத்தில் பாலம் அமைத்தால் புதிய பேருந்து நிலையம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும் எனவும் கூறினார்

Follow Us:
Download App:
  • android
  • ios