கலைஞரின் பேனாவைப்பற்றி கைநாட்டுகளுக்கு என்ன தெரியும்.?- இறங்கி அடிக்கும் துரைமுருகன்
மு.க. ஸ்டாலின் அமர்ந்த இடத்தில் இருந்தே இந்தியாவில் முதல் முதலமைச்சர் என்ற பட்டத்தை பெற்றிருப்பதாக தெரிவித்த அமைச்சர் துரைமுருகன், கருணாநிதியை மிஞ்சக்கூடிய ஆற்றல் ஸ்டாலினிடம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
பேனா நினைவு சின்னம்
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவாக மெரினா கடலில் 81 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பேனா நினைவுசின்னம் அமைக்கப்படவுள்ளது. இதற்க்கு முதல் கட்ட அனுமதி மத்திய அரசு அளித்துள்ள நிலையில், அடுத்த கட்டமாக சுற்றுசூழல் அனுமதி பெறுவதற்கான கருத்து கேட்பு கூட்டம் சென்னையில் கடந்த வாரம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேனா நினைவுசின்னத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் பேனா நினைவு சின்னம் வைத்தால் உடைப்பேன் என தெரிவித்து இருந்தார். இது போன்று அதிமுக, பாஜகவும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தது.
அனைத்து துறை ஒப்புதலுக்கு பின்னரே பேனா சின்னம் அமைக்கப்படும்... தமிழக பொதுப்பணித்துறை விளக்கம்!!
கைநாட்டுகளுக்கு என்ன தெரியும்
இந்தநிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், திமுக பொதுச்செயலாளரும், மூத்த அமைச்சருமான துரைமுருகன் கருத்து தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் திமுக சார்பில் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் துரைமுருகன், நிர்வாகிகள் முன்பு பேசுகையில், கலைஞரின் பேனா சாதாரண பேனா அல்ல, அண்ணாவே மிரண்டுபோன பேனா. அந்த பேனாவை பற்றி கைநாட்டுக்கு என்ன தெரியும்?.என காட்டமாக பதில் அளித்தார். இந்த பேனாவிற்கு உயிரோட்டம் உள்ளதாக தெரிவித்தவர், அந்த பேனாவை நிறுத்திக் காட்டுகிறோம் என கூறினார். கருணாநிதியை மிஞ்சக்கூடிய ஆற்றல் ஸ்டாலினிடம் உள்ளதாகவும், இந்தியாவே பாராட்டுகிற, அடிபணிகிற முதலமைச்சராக எதிர்காலத்தில் வருவார் என துரைமுருகன் தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்