தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தாயார் இறந்த தகவல் அறிந்து, நேரில் நலம் விசாரிக்க தமிழக வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு காலை சென்னையிலிருந்து சேலத்திற்கு காரில் சென்றுக்கொண்டிருந்தார். காலை 10 மணியளவில் திண்டிவனம் அருகே கார் சென்றுகொண்டிருந்தபோது அமைச்சர் துரைக்கண்ணுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

இதனையடுத்து, உடனே விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதையடுத்து தற்போது அவர் உடல்நிலை சீராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.