வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து அவர் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சென்னை, அடையார் கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் தங்கி இருந்தார். அப்போது நேற்று இரவு அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவரது உதவியாளர்கள் மற்றும் பாதுகாவலர்கள் ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ஆயிரம்விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

அங்கு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் இன்று அவரது இதய ரத்தக்குழாயில் அடைப்பு இருக்கிறதா? என்று பரிசோதனை செய்யும் ஆஞ்ஜியோ பரிசோதனை செய்யப்பட்டது. இந்த பரிசோதனை முடிவின்படி அவருக்கு மேலும் சிகிச்சை அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

தற்போது அவர் நலமுடன் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று முன்தினம் நெஞ்சுவலி காரணமாக அமைச்சர் துரைக்கண்ணும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.