டி.டி.வி.தினகரன் தனது ஆதரவு எம்எல்ஏக்களை தனியாக பிரித்துச் சென்று ஜெயலலிதா அரசை கவிழ்க்கப் பார்ப்பதாகவும், இந்த அரசை திமுகவிடம் ஒப்படைக்க சதி செய்வதாகவும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அதிரடியாக குற்றம்சாட்டினார்.

ஓபிஎஸ் – இபிஎஸ் அணிகள் இணைந்த பிறகு, சசிகலா மற்றும் டி.டி.வி.தினகரனை கட்சியில் இருந்தும் பதவியில் இருந்தும் நீக்க நடவடிக்கை எடுத்து வருவதாக வைத்திலிங்கம் எம்.பி. தெரிவித்திருந்தார்.

இதனால் கடுப்பான டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் எடப்பாடி அரசுக்கு அளித்த வந்த ஆதரவை விலக்கிக் கொள்வதாக  ஆளுநரிடம் கடிதம் கொடுத்துள்ளனர்.

இதனால் தற்போதைய எடப்பாடி பழனிசாமி அரசு கவிழும் நிலையில் உள்ளது.

டி.டி.வி.தினகரன் தனது ஆதரவு எம்எல்ஏக்களை தனியாக பிரித்துச் சென்று ஜெயலலிதா அரசை கவிழ்க்கப் பார்ப்பதாகவும், இந்த அரசை திமுகவிடம் ஒப்படைக்க சதி செய்வதாகவும் குற்றம்சாட்டினார்.

ஆனால் ஜெயலலிதா ஆசியால், தற்போது தமிழகத்தில் நல்லாட்சி நடைபெற்று வருவதாகவும், இந்த அரசை யாராலும் கவிழ்க்க முடியாது என்றும் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.