கே.பி.முனுசாமி சசிகலா குடும்பத்தை எதிர்த்தவுடன் அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சி.வி.சண்முகத்திற்கும் உத்தரவு போனது.
சி.வி.சண்முகத்தை கே.பி.முனுசாமிக்கு பதிலடி கொடுக்க சொன்னதற்கு காரணமே அவரும் இவரும் ஒரே இனத்தை சேர்ந்தவர்கள்தான்.
இன்று தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலையில் சி.வி.சண்முகம் பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு அளித்ததாக தகவல் பரவியது.
ஆனால் திடீரென யார் என்ன பேசினார்களோ தெரியவில்லை . சி.வி.சண்முகம் போயஸ் தோட்டத்திற்கு முன்பாக காட்சியளித்தார்.
அவரை வலுக்கட்டாயமாக செய்தியாளர்களிடம் பேச வைத்தனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சி.வி.சண்முகம் வாய்க்கு வந்ததை உளறி கொட்டினார். அமைச்சர் கண்கள் சிவந்தும் ஃபுல் மப்பாக பேசியதை யாரும் கவனிக்க தவறவில்லை.
வார்த்தைகள் சரியாக வராமல் வாய் குளறியது சி.வி.சண்முகத்திற்கு. ஓ.பி.எஸ் கட்சியை காட்டி கொடுத்த கருங்காலி என வசை பாடினார்.
தமிழகத்தின் சட்டத்துறையை கையில் வைத்திருக்கும் ஒருவர் ஃபுல் மப்பில் வந்து பேசியது பார்த்தவர்களை அதிர்ச்சியடைய வைத்தது.
