Asianet News TamilAsianet News Tamil

ஆளுங்கட்சியை அலறவிடும் அமலாக்கத்துறை.. அமைச்சர் பொன்முடியை தொடர்ந்து அடுத்த ஸ்கெட்ச் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு?

கடந்த 2002-2006ஆம் ஆண்டில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சராக இருந்த அனிதா ராதாகிருஷ்ணன் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தமிழக லஞ்ச ஒழிப்புதுறை கடந்த 2006-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது.

minister anitha radhakrishnan next target of enforcement department
Author
First Published Jul 19, 2023, 11:40 AM IST

மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக நிலுவையில் உள்ள சொத்துக்குவிப்பு வழக்கில் அமலாக்கத்துறை புதிய ஆதாரங்களை இன்று தாக்கல் செய்கிறது. 

திமுக அமைச்சரவையில் மீன் வளத்துறை மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சராக அனிதா ராதாகிருஷ்ணன் பதவி வகித்து வருகிறார். இவர், கடந்த 2002-2006ஆம் ஆண்டில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சராக இருந்த அனிதா ராதாகிருஷ்ணன் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தமிழக லஞ்ச ஒழிப்புதுறை கடந்த 2006-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த அமலாக்கத்துறை, அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அவரது குடும்ப உறுப்பினர்களிடமும் விசாரணை நடத்தியது. மேலும், அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான 6 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துகளை கடந்த பிப்ரவரி மாதம் முடக்கியது.

இதையும் படிங்க;- இரண்டு நாட்கள் தொடர்ந்த ED சோதனை.! ஸ்டாலினை காலையிலையே சந்தித்த பொன்முடி- பேசியது என்ன.?

minister anitha radhakrishnan next target of enforcement department

இந்த வழக்கு கடந்த ஏப்ரல் 19-ம் தேதி தூத்துக்குடி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது அமலாக்கத்துறை சார்பில், இந்த வழக்கில் எங்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை 80% முடிவடைந்துள்ளதால் இதில் அமலாக்க துறையை சேர்த்துக் கொள்ள முடியாது என லஞ்ச ஒழிப்பு துறையினர் நீதிமன்றத்தில் திட்டவட்டமாக தெரிவித்தனர். 

minister anitha radhakrishnan next target of enforcement department

இந்நிலையில், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சொத்து குவிப்பு வழக்கில் தங்களையும் இணைக்கக் கோரி அமலாக்கத்துறை தொடர்ந்த மனு மீது இன்று விசாரணை நடைபெறுகிறது.  அமலாக்கத் துறையின் மனு மீது தூத்துக்குடி நீதிமன்றம் என்ன முடிவெடுக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு திமுகவினர் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க;-  அமலாக்கத்துறை விசாரணைக்கு ஐகோர்ட் தடை... அப்பாடா என பெரூமூச்சு விடும் திமுக அமைச்சர்..!

ஏற்கெனவே திமுக அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, பொன்முடி ஆகியோரைத் தொடர்ந்து அனிதா ராதாகிருஷ்ணனை வளைக்க அமலாக்கத்துறை குறிவைத்து காய் நகர்த்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios