Asianet News TamilAsianet News Tamil

பரபரப்பு..!அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சொத்துகள் முடக்கம்.. அமலாக்கத்துறை திடீர் நடவடிக்கை..

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு, சொந்தமான ரூ.6.5 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
 

Minister Anitha Radhakrishnan assets frozen
Author
Tamilnádu, First Published Feb 2, 2022, 8:36 PM IST

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு, சொந்தமான ரூ.6.5 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் மீன்வளத்துறை அமைச்சராக இருப்பவர் அனிதா ராதாகிருஷ்ணன். இந்நிலையில் தான் சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு, சொந்தமான ரூ.6.5 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இவர் 2001 - 2006-ல் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியில் கால்நடை மற்றும் வீட்டு வசதி, நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சராக பதவி வகித்தார்.அப்போது,  வருமானத்துக்கு அதிகமாக 4.9 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்திருந்ததாக 2006-ல்ஆண்டு தூத்துக்குடி லஞ்ச ஒழிப்பு காவல்துறை வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கு தொடர்பான விவரங்கள் அனைத்தும் அமலாக்கத்துறைக்கு சென்றது. அதன்பேரில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது.

இதனை தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பாக அனிதா ராதாகிருஷ்ணனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. அவருடைய குடும்பத்தினர் 7 பேருக்கும் சம்மன் அனுப்பப்பட்டு விசாரணையும் நடைபெற்றது. இந்த விசாரணைக்கு பிறகு அமலாக்கத்துறையும் அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு செய்தது. இதைத்தொடர்ந்து, ஊழல் தடுப்புச் சட்டம்,1988ன் கீழ் அனிதா ராதாகிருஷ்ணன் மீது பதிந்த எஃப்ஐஆர் அடிப்படையில் அமலாக்கத்துறை இந்த வழக்கை விசாரித்து வந்தது.

இந்நிலையில், தற்போது 14.5.2001 முதல் 31.03.2006 வரையிலான காலத்தில் அனிதா ராதாகிருஷ்ணன் வாங்கிய சொத்துக்கள், அவரது குடும்பத்தினர் வாங்கிய சொத்துக்கள் என சுமார் ரூ.6.5 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 160 ஏக்கர் நிலம் உள்ளிட்ட 18 சொத்துக்களை முடக்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. க டந்த 2002 ம் ஆண்டு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது பண மோசடி வழக்கு தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

இந்த வழக்குப்பதிவை தொடர்ந்துதான் தற்போது அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் சொத்துக்களையும், அவருடைய குடும்பத்தினர் சொத்துக்களையும் அமலாக்கத்துறை முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த வழக்கில் அடுத்தகட்டமாக நீதிமன்றத்தில் இது தொடர்பான ஆவணங்களை சமர்பிப்பார்கள் என்று கூறப்படுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios