அக்டோபரில் துவங்கிய சர்வதேச கண்காட்சி ஒரு சில நாளில் முடிவடைய உள்ள நிலையில், தமிழகம் சார்பில் அங்கு அரங்கம் அமைத்திருப்பது வேடிக்கையாக உள்ளது. இதை ஒரு சாக்காக வைத்து குடும்பமே துபாய் சென்றுள்ளனர்.
தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் துபாய் பயணம் முதலீட்டை ஈர்க்கவா அல்லது முதலீட்டை தொடங்கவா என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வியெழுப்பியுள்ளார். ஓமலூரில் செய்தியாளரை சந்தித்து அவர் இவ்வாறு கூறினார்.
திமுக ஆட்சிக்கு வந்தது முதல் பல்வேறு அதிரடி திட்டங்களை அறிவித்து வருகிறது. அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறது. அதேநேரத்தில் எதிர்க்கட்சிகளான அதிமுக-பாஜக அரசை மிகக் கடுமையாக விமர்சித்து வருகின்றன. தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை என்ற விமர்சனம் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறது. இதற்கு மத்தியில் முதலமைச்சர் ஸ்டாலினின் துபாய் பயணத்தை அதிமுக-பாஜக என இரண்டு கட்சிகளும் மாறி மாறி வறுத்தெடுத்து வருகின்றன.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் முதலமைச்சர் ஸ்டாலினின் துபாய் பயணம் குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மிக கடுமையாக விமர்சித்திருந்தார். மாநிலத்தில் நிதியை பெருக்க ஸ்டாலின் துபாய் சொல்லவில்லை என்றும், தனது குடும்பத்தை பெருக்க, குடும்ப நிதியை பெருக்க சென்றிருக்கிறார் எனவும் விமர்சித்தார். அவரின் விமர்சனம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், தனது பேச்சுக்கு அண்ணாமலை பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லை என்றால் அவருக்கு எதிராக மான நஷ்ட ஈடு வழக்கு தொடுக்கப்படும் என திமுக சார்பில் எச்சரிக்கப்பட்டது. ஆனால் அண்ணமலை மன்னிப்பு ஏதும் கோரவில்லை. எடவே அண்ணாமலைக்கு எதிராக 100 கோடி ரூபாய் அபராத தொகை கேட்டு திமுக வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்நிலையில் முதல்வரின் துபாய் பயணம் குறித்து சட்டமன்ற எதிர் கட்சித் தலைவர், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி சேலம் ஓமலூரில் கருத்து கூறியுள்ளார். சேலம் புறநகர் மாவட்ட அதிமுக அமைப்பு தேர்தல் நேற்று ஓமலூரில் உள்ள காட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அவர் பேசிய விவரம் பின்வருமாறு:- முதலமைச்சர் ஸ்டாலின் தனி விமானத்தில் துபாய் பயணம் மேற்கொண்டுள்ளார். அவருடன் துணை அமைச்சர்கள், அதிகாரிகள் சென்றது சரி, ஆனால் குடும்பத்தினர் ஏன் செல்ல வேண்டும்? இது என்ன குடும்ப சுற்றுலாவா? மக்கள் அப்படித்தான் பார்க்கிறார்கள். அவர்கள் துபாய் சென்றிருப்பது தமிழகத்திற்கு தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்காக? அல்லது குடும்ப முதலீட்டை தொடங்குவதற்கா என மக்கள் கேள்வி கேட்கின்றனர்.

அக்டோபரில் துவங்கிய சர்வதேச கண்காட்சி ஒரு சில நாளில் முடிவடைய உள்ள நிலையில், தமிழகம் சார்பில் அங்கு அரங்கம் அமைத்திருப்பது வேடிக்கையாக உள்ளது. இதை ஒரு சாக்காக வைத்து குடும்பமே துபாய் சென்றுள்ளனர். நான் வெளிநாடு சென்றபோது பயணிகள் விமானத்தில் சென்றேன், துறை அமைச்சர்கள் செயலர்கள் மட்டும் வந்தனர். அப்போது லண்டினில் கிங்ஸ் இன்ஸ்டியூட் போல நமது மருத்துவமனைகளை மேம்படுத்துவது குறித்து ஆய்வு செய்தோம், 108 ஆம்புலன்ஸ்சை மேம்படுத்துவத் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. ஆனால் எனது லண்டன் பயணத்தை அப்போது ஸ்டாலின், நான் அமைச்சர்களுடன் சுற்றுலா சென்றதாக அவதூறு பரப்பினார். இப்போது அவர் குடும்பத்துடன் சென்று உள்ளாரே என அவர் விமர்சித்துள்ளார்.
