பெற்றோர்களே தெரியுமா…? பள்ளிகள் திறக்கும் தேதியில் மாற்றம்…. தமிழக அரசின் டுவிஸ்ட்
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பில் மாற்றம் இருப்பதை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
திருச்சி: தமிழகத்தில் பள்ளிகள் திறப்பில் மாற்றம் இருப்பதை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
அண்மையில் தமிழகத்தில் ஆரம்ப பள்ளிகள் திறப்பது தொடர்பான ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் அந்த தகவலில் உள்ள உண்மை தன்மை குறித்து பல்வேறு கேள்விகளும், சந்தேகங்களும் எழுந்தன.
இந் நிலையில் நர்சரி, கிண்டர்கார்டன் பள்ளிகள் திறப்பது குறித்து தெளிவான அறிக்கை ஒருசில நாளில் வெளியாகும் என்று பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
திருச்சியில் சென்ட்ரல் பேருந்து நிலையத்தில் இருந்து துவாக்குடி வரை ஏசி வசதி கொண்ட நகர பேருந்து இயக்கத்தை அவர் துவக்கி வைத்தார். அந்த பேருந்திலும் அவர் பயணம் செய்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பள்ளி ஆசிரியர்களுக்கு ஜீரோ கவுன்சிலிங் நடத்த வாய்ப்பில்லை. கொரோனா காலத்தில் ஆசிரியர்கள் பணியின் போது உயிரிழந்து இருந்தால் அவர்களது வாரிசுகளுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை என்பது பற்றி முதலமைச்சர் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்.
மாணவர்களை பள்ளிக்கு வரவழைப்பது தான் ஆசிரியர்கள் பணி. அவர்களை எக்காரணம் கொண்டும் கட்டாயப்படுத்தக்கூடாது. அப்படி துன்புறுத்தினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
நர்சரி பள்ளிகள் திறப்பது குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பு தவறானது. முதலமைச்சர் சந்திப்பின் போது அங்கன்வாடி குழந்தைகளுக்கு சத்துணவு கொடுப்பது, அவர்களை பள்ளிக்கு வரவழைப்பது பற்றி தான் ஆலோசித்தோம்.
ஆனால், வெளியான அறிவிப்பில் நர்சரி மற்றும் கிண்டர்கார்டன் பள்ளிகள் திறப்பு குறித்து அறிவிப்பு வந்துள்ளது. முழுமையான தெளிவான அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.