நடிகர் சிம்பு தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் “நான் சமீபத்தில் எனக்கு கட் அவுட் பாலபிஷேகம் எல்லாம் வேண்டாம் என்று ரசிகர்களிடம் கூறினேன். அதற்கு சிலர் எனக்கெல்லாம் அந்த அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்களா? இவர் எதுக்கு இதெல்லாம் பேசுறாரு. அவருக்கு இருக்குற 2,3 ரசிகருக்கு இது தேவையா? ஒரு தப்பு பண்ணுனா திருத்திக்கனும்.

அதனால, அந்த 2,3 ரசிகர்களுக்கு நான் சொல்லும் அன்புக்கட்டளை என்னனா? இதுவரைக்கும் நீங்க வைக்காத அளவுக்கு பிளெக்ஸ், கட் அவுட் வைக்கிறீங்க. பால் எல்லாம் பாக்கெட்டில் பத்தாது, அண்டாவில் கொண்டு வந்து ஊற்ற வேண்டும். வேற லெவலில் செய்றீங்க. இதுதான் நான் உங்களிடம் எதிர்பார்க்கிறேன்.” என்று பேசியுள்ளார். 

இந்நிலையில், தனது கட்அவுட்டுக்கு அண்டாவில் பாலாபிஷேகம் செய்யுமாறு கூறிய நடிகர் சிம்புவுக்கு தமிழ்நாடு பால் முகவர்கள், தொழிலாளர்கள் சங்கத்தினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.  கண்டனம் தெரிவித்துள்ள தமிழ்நாடு பால் முகவர்கள், மன்னிப்பு கேட்காவிட்டால் வழக்கு தொடருவோம் என தெரிவித்துள்ளனர்.