90ஸ்களில் பிரபலமாக விளங்கிய அந்த நடிகை திடீரென ஒரு கட்சியில் இருந்து இன்னொரு கட்சிக்கு மாறியதன் பின்னணியில் பரபரப்பான வீடியோ ஒன்று இருப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது.

90ஸ்களில் பிரபலமாக இருக்கும் போதே நடிகர்களுடன் பார்ட்டி செய்வதில் அந்த நடிகை பலே கில்லாடி. திருமணத்திற்கு முன்பான லிவிங் டு கெதரிலும் ஒரு சில நடிகர்ளுடன் அந்த நடிகை இருந்ததாக சொல்லப்பட்டது. தமிழ் மட்டும் அல்லாமல், மலையாளம், கன்னடம், தெலுங்கு நடிகர்களுடனும் நடிகை சேர்த்து கிசுகிசுக்கப்பட்டார். ஆனால் திடீரென சத்தமே இல்லாமல் பிரபல இயக்குனர் ஒருவரை காதல் வலையில் வீழ்த்தி அவரை கணவராக்கி குடும்பம் குட்டி என்று செட்டில் ஆகிவிட்டார்.

ஆனால் திருமணத்திற்கு பிறகும் நடிகை பார்ட்டி பண்ணுவதை விடவில்லை. திருமணத்திற்கு பிறகும் ஆடிய காலும் பாடிய வாயும் நடிகைக்கு சும்மா இருக்கவில்லை. இதன் பிறகு கணவருடன் ஒரு ஒப்பந்தம் போட்டுவிட்டு நள்ளிரவு பார்ட்டியில் தவறாமல் கலந்து கொண்டு வந்தார். சில மாதங்களுக்கு முன்னர் நடிகை, கையில் மதுக்கோப்பையுடன் நட்சத்திர ஓட்டலில் தள்ளாடிய வீடியோ ஒன்று கூட வெளியானது. அரசியல் கட்சிகளில் சேர்ந்து பணியாற்றினாலும் தனது சினிமா தொடர்புகளை விடாமல் அதிலும் இளம் நடிகர்களுடனான தனது தொடர்புகளை அவ்வப்போது புதுப்பித்துக் கொள்வார்.

கணவரும் நம்மை ப்ரீயாக விட்டால் போதும் என்று அவர் ஒரு பக்கம் நடிகைகளுடன் பிசியாக இருக்க ஆரம்பித்தார். இதனால் நடிகை இரவு பார்ட்டிகளின் எண்ணிக்கையை அதிகரித்ததாக சொல்கிறார்கள். இருவருக்கும் இடையிலான அந்த மாதிரி அன்டர்ஸ்டேன்டிங்கால் குடும்பத்தில் பிரச்சனை இல்லாமல் சென்றது. ஆனால் நடிகை அரசியலுக்கு சென்ற பிறகு பிரச்சனைகள் வெடித்தன. ஏகப்பட்ட சர்ச்சைகளில் நடிகை சிக்கினார். இதனால் கோர்ட், கேஸ் என்று நடிகை ஊர் ஊராக சுற்ற ஆரம்பித்த நிலையில் பிரச்சனை அதிகமானதாக சொல்கிறார்கள்.

இதன் பிறகு தேசிய கட்சியில் நடிகை சேர்ந்த நிலையில் பிரச்சனைகள் குறைந்தன. ஆனால் இதற்கிடையே நடிகையின் கணவர் அகலக் கால் வைத்த காரணத்தினால் இருவரும் சேர்ந்து நடத்திய தயாரிப்பு நிறுவனம் பெரும் நஷ்டம் அடைந்ததாக கூறுகிறார்கள். மேலும் கடன் தொல்லையும் சேர்ந்து கொண்டதாக சொல்கிறார்கள். இந்த நிலையில் நடிகை இரவு பார்ட்டி ஒன்றில் போதை மருந்துடன் உற்சாகமாக இருக்கும் வீடியோ ஒன்று மிக முக்கிய நபரிடம் கிடைத்ததாக கூறுகிறார்கள்.

அந்த வீடியோவை வைத்து தான் நடிகையை வேறு பக்கம் அந்த மிக முக்கிய நபர் மடை மாற்றிவிட்டதாகவும், இதனால் தான் நடிகை வேறு வழியே இல்லாமல் அந்த கட்சியில் சேர்ந்ததாகவும் சொல்கிறார்கள். எது எப்படியோ வீடியோ வெளியாகக்கூடாது என்று நடிகை இப்படி கட்சி மாறியது உண்மை என்றால் அது எத்தனை நாட்களுக்கு நீடிக்குமோ, கடவுளுக்கே வெளிச்சம்.