எம்ஜிஆர்,ஜெயலலிதா,கருணாநிதி இவர்களை விட.. முதலமைச்சர் ஸ்டாலின்.? அமைச்சர் பேச்சு !
அமைச்சர் என்பவர் முதலமைச்சரின் சொல்லுக்கு கட்டுப்பட்டவர். அமைச்சர்கள், அதிகாரிகள், மக்கள் என அனைவரையும் அரவணைத்துக் கொண்டு செல்வது இந்த ஆட்சிக்கு உள்ளது என்று கூறியுள்ளார் அமைச்சர் ராஜகண்ணப்பன்.
பொது சுகாதாரத்துறையின் நூற்றாண்டு விழா மற்றும் பரமக்குடி சுகாதார மாவட்டத்தின் 30 ஆம் ஆண்டு விழா ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நடைபெற்றது. இதில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கலந்து கொண்டார்.
இதையும் படிங்க..உங்களுக்கு ரத்தம் கொதிக்கவில்லையா முதல்வரே.? திமுகவை அட்டாக் செய்த பாஜக !
பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமைச்சர் என்பவர் முதலமைச்சரின் சொல்லுக்கு கட்டுப்பட்டவர். அமைச்சர்கள், அதிகாரிகள், மக்கள் என அனைவரையும் அரவணைத்துக் கொண்டு செல்வது இந்த ஆட்சிக்கு உள்ளது. அனைவரையும் அரவணைத்து மக்களுக்கு சேவை செய்வதுதான் முதல் குறிக்கோள் என்பது அரசின் நோக்கம்.
இதையும் படிங்க..டெக்ஸ்டர் சீரிஸ்.! புது பிரிட்ஜ்.! வேறொரு பெண்ணுடன் அவுட்டிங்.! கொடூரமாக கொல்லப்பட்ட காதலி
முதலமைச்சர் நோக்கம். தமிழக முதல்வர் எப்போதும் நிதானமாக செயல்படுவார். நான் ஜெயலலிதா, எம்ஜிஆர், கலைஞர் கருணாநிதி ஆகியோரை முதலமைச்சராக பார்த்து உள்ளேன் நான் பார்த்த முதலமைச்சர்களில் மிகவும் நிதானமாக செயல்பட கூடியவர் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் என்று கூறினார்.
இதையும் படிங்க..கல்லூரிகளில் ராகிங் கொடுமையா.? கடும் நடவடிக்கை பாயும் - டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி உத்தரவு !