மாஃபியா கலாச்சாரத்தை தமிழகத்துக்கு கொண்டு வந்ததே மன்னார்குடி கும்பல்தான் என்றும், அம்மா முன்னாள் நடித்து ஊரை ஏமாற்றிய நயவஞ்சக நரிகள் என்று டிடிவி தினகரன் குறித்து, அமைச்சர் ஜெயக்குமார் பேசியுள்ளார். எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் அமைச்சர் ஜெயக்குமார் பேசும்போது, டிடிவி தினகரன் குறித்து சில விமர்சனங்களை முன் வைத்தார். அப்போது, திகாரில் இருக்க வேண்டிய சில கரங்கள் தினகரன்களாக ஊருக்குள் சுற்றிக் கொண்டிருக்கிறாகள். சட்டப்பிரிவில் எத்தனை உள்ளதோ அத்தனை பிரிவுகள் வழக்கு எதிர்கொண்டு வாய்தா வாழ்க்கை கொண்டிருக்கும் அற்ப பதர்கள்.

 மாஃபியா கலாச்சாரத்தை தமிழகத்துக்கு கொண்டு வந்ததே மன்னார்குடி கும்பல்தான். அவர்களுக்கு எங்கிருந்து வந்தது இந்த கோட்டும் சூட்டும். அம்மா முன்னாள் நடித்து ஊரை ஏமாற்றிய நயவஞ்ச நரிகள். அந்த நரிக் கூட்டத்தில் வந்த நரி ஒன்று அம்மாவின் ஆட்சியைப் பார்த்து ஊளையிட்டு செல்கிறது.

 

மணிப்பூர், அசாம், பீகாரில் இருந்தும் பிழைப்பதற்காக தமிழகத்தில் தஞ்சம் புகுந்த அவர்களுக்கு 100-யும் 200-யும் காட்டி கூட்டத்தைக் கூட்டி பிரம்மாண்டத்தை பொதுக்கூட்டத்தை நடத்தி விட்டோம் என்று மார்தட்டிக் கொள்கிறார். வெட்கம் வேண்டாமா. இது எவ்வளவு பெரிய கேவலம். பிழைக்க வந்தவர்களிடமே பிச்சைக் கேட்கிறாயே... வெட்கமில்லை உனக்கு... 

20 ரூபாய் அயோக்யன் என்று சொன்னால் ஆர.கே.நகர் மக்களுக்குத் தெரியும். வட சென்னையில் வந்து விட்டது. யாராவது 20 ரூபாய் நோட்டை எடுத்து வட சென்னையில் வந்தாலே துரத்தி துரத்தி அடிக்கிறார்கள் ஆர்.கே.நகர் மக்கள். காரணம் உத்தம புத்திரன் என்று ஊரை ஏமாற்றி திரியும் சிலரால் தலைக்குமேல் தொங்கும் அமலாக்க வழக்குகளை முதலில் கவனியுங்கள். தங்கம்போல அம்மா உருவாக்கி தந்துவிட்டு போயுள்ள அதிமுகவையும் தமிழ்நாட்டையும் நாங்கள் பாத்துக் கொள்கிறோம். என்று டிடிவி தினகரன் குறித்து அமைச்சர் ஜெயக்குமார் பேசினார்.