கேரளா, கர்நாடகா மாநில நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை கொட்டி வருவதால் மேட்டூர் அணை ஒரே நாளில் 18  அடி உயர்ந்து 85 அடியை எட்டி உள்ளது.நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 85 .62 அடியாக உயர்ந்துள்ளது. 

நேற்று (அணையின் நீர்மட்டம் 67 அடியாக இருந்த நிலையில், ஒரே நாளில் 18 உயர்ந்து 85.62 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவும் 1.15 லட்சம் கனஅடியில் இருந்து 2 லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளது. 

அணையின் நீர் இருப்பு 48.61 டிஎம்சி.,யாக உள்ளது. இதே நிலை தொடர்ந்தால் இன்று மாலைக்குள் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.கர்நாட பகுதிகளில் மழையின் அளவு குறைந்திருந்தாலும், ஹேமாவதி அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்கப்படுவதால், கேஆர்எஸ் அணையில் இருந்து காவிரி ஆறிறில் 2 லட்சம் கனஅடி நிர் திறந்து விடப்பட்டுள்ளது.

இந்த நீர் தற்போது மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து இன்று மாலைக்குள் மேட்டூர் அணை 100 அடியை எட்டும் என தெரிகிறது. இதையடுத்து நாளை மேட்டூர் அணையைத் திற்கக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.