5 ஆண்டுகளுக்குப் பின் மேட்டூர்  அணை 109 அடியை எட்டியுள்ள நிலையில் இன்று பாசனத்துக்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அணையை திறந்து வைத்தார்.

கர்நாடக மாநிலத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை  நன்கு பொழிந்ததால் அங்குள்ள அணைகள் நிரம்பி வழிந்தன. இதையடுத்து அங்கிருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீரால் மேட்டுர் அணை தற்போது 109 அடிகளுக்கு மேல் பெருகி கடல் போல் காட்சியளிக்கிறது.

பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் ஜுன் 12 ஆம் தேதி டெல்டா மாவட்ட பாசன்ததுக்காக மேட்டூர் அணை திறந்துவிடப்படும். ஆனால் இந்த ஆண்டு அணையில் தண்ணீர் இல்லாததால் அணை திறக்கப்படவில்லை.

இந்நிலையில் இயற்கை அன்னையின் அருட் கொடையால் நல்ல மழை பெய்து மேட்டூர் அணை 109 அடியை எட்டியுள்ளது. இதையடுத்து டெல்டா பாசன விவசாயத்துக்காக மேட்டூர் அணையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.

 இன்று திறக்கப்படுகிறது. மேட்டூர் அணை திறப்பை சிறப்பான நிகழ்வாக அமைக்கும் வகையில், முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி நேரில் பங்கேற்கிறார். அதன்படி, இன்று காலை 10 மணிக்கு மேட்டூர் அணையை அவர் திறந்து வைக்கிறார்.

தற்போது விநாடிக்கு 2000 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இது மதியம் 5000 அடியாகவும், இரவு 20000 அடியாகவும் படிப்படியாக உயர்த்தப்படும்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், பி.தங்கமணி, டாக்டர் சரோஜா, கே.பி.அன்பழகன், கே.சி.கருப்பணன், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் பங்கேற்கின்றனர். அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான செம்மலை உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேட்டூர் அணை திறக்கப்பட்டதால் டெல்டா மாவட்ட விவசாயிகள் உற்சாகமடைநதுள்ளனர்.மேட்டூர் அணையை முதலமைச்சரே நேரடியாக வந்து திறந்து வைப்பது இதுவே முதல்முறை,