இந்திய அரசியலமைப்பு புரோட்டக்கால் படி தெலங்கானா மாநில ஆளுநராக பதவியேற்கப்போகும் தமிழிசை சவுந்தரராஜனை பற்றி இனி யாரேனும் மீம்ஸ்போட்டால் அவர்கள் கம்பி எண்ணப்போவது உறுதி. காரணம் அவரது அதிகாரத்திற்கு உட்பட்ட சட்ட நெறிமுறைகள் அப்படி அமைந்துள்ளன. 

வரும் 8-ம் தேதி தெலங்கானா ஆளுநராக தமிழிசை பதவியேற்க உள்ளார். அவர் ஆளுநராக பதவியேற்க உள்ள நிலையில் மீம்ஸ் கிரியேட்டர்கள் சோகத்தில் உள்ளனர். மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு ஹெவியாக கண்டண்ட் கொடுத்தவர் தமிழிசை. அவருடைய பேட்டிகளை வைத்து உடனுக்குடன் மீம்ஸ் வெளியிட்டு கிண்டலடிப்பார்கள்.

ஒரு கட்டத்தில் அவருடைய உருவத்தை வைத்தும் தலை முடியை வைத்தும், உயரத்தை வைத்தும், தாமரை மலர்ந்தே தீரும் என்ற வாக்கியத்தை வைத்தும் மீம்ஸ் கிரியேட்டர்கள் தமிழிசையை வறுத்தெடுத்தனர். உருவத்தை வைத்து மீம்ஸ் கிரியேட்டர்களால் அதிகளவில் கிண்டலுக்கு ஆளானவர் தமிழகத்தில் தமிழிசை மட்டுமே. தமிழிசை ஆளுநராக நியமிக்கப்பட்ட உடனே பல மீம்ஸ் கிரியேட் பக்கங்களை நடத்திவரும் மீம்ஸ் கிரியேட்டர்கள் வருத்தத்துடன் தமிழிசைக்கு வாழ்த்து தெரிவித்திருந்தனர். இனிமேல் அவர்கள் மீம்ஸ்களை உருவாக்க முடியாது.

அவர் இப்போது கட்சி தலைவர் அல்ல. ஜனாதிபதியின் நேரடி பிரதிநிதி. வானளாவ அதிகாரங்களை கொண்டவர். அவரை கேலி செய்வது இந்திய இறையாண்மையை கேலி செய்வதற்கு ஒப்பீடானது. இனி தெலுங்கானாவில் உள்ள கல்வி நிறுவனங்கள் இவருக்கு கிழ். அங்குள்ள யுனிவர்சிட்டிக்கெல்லாம் வேந்தர். நம்பரே இல்லாமல் கார் வைத்துக் கொள்ளும் அதிகாரம் இவருக்கு இருக்கிறது. தெலங்கானா முதல்வர் அமைச்சர்கள் இனி இவரது பார்வையில். ஆகையால் இனி இவரை வைத்து மீம்ஸ் கிரியேட் செய்தால் அது சட்டப்படி குற்றம். சிறைவாசம் நிச்சயம்.  

இந்நிலையில் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு தமிழிசை அறிவுரையை வழங்கி இருக்கிறார். “நான் எப்போதுமே மீம்ஸ் கிரியேட்டர்களின் கற்பனை வளத்தை நேர்மறையான விசயங்களுக்கு பயன்படுத்துங்கள் என்று சொல்லி வந்திருக்கிறேன். தமிழிசையைக் குறி வைப்பதற்கு பதிலாக மீம்ஸ்கள் மூலம் நேர்மறையான சமுக விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள். அவர்களுடைய கற்பனை திறனையும் அதை எடிட் செய்யும் திறமையையும் நான் பாராட்டுகிறேன். தமிழிசையை வெச்சு செஞ்சுட்டீங்க. இதை அவர்கள்  இனியும் தொடர வேண்டும் என்றால் தொடரட்டும். அதை என் இதயத்துக்குக் கொண்டு செல்ல மாட்டேன்.” எனத் தெரிவித்துளார். 

இப்படி சொல்வது அவரது பெருந்தன்மை. ஆனாலும் அவரை வைத்து மீம்ஸ் போடுவது சட்டப்படி குற்றம். மீறினால் சிறை தண்டனை உறுதி. ஆகையால் இதனை உணர்ந்து மீம்ஸ்களை உருவாக்காமல் தவிர்ப்பதே நல்லது.