மேகதாது விவகாரம் .. கர்நாடகாவுக்கு கடிவாளம் போட தமிழக அரசு புதிய நடவடிக்கை..!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்ற பின்பு கர்நாடக அரசின் அணை கட்டும் திட்டத்துக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானங்கள் நிறைவேற்றினார். ஒன்றிய நீர்வளத் துறை அமைச்சகத்திடம் முறையீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் மேகதாது அணை தொடர்பாக பிரதான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
 

Mekedatu Dam project report should be canceled... Tamil Nadu government petitions the Supreme Court!

மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு வழங்கிய திட்ட அறிக்கையை ரத்து செய்ய ஒன்றிய நீர்வள ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. 

காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் பல ஆயிரம் கோடி மதிப்பில் அணைகட்டுவதற்கான நடவடிக்கைகளை கர்நாடகா அரசு எடுத்து வருகிறது. ஆரம்பத்தில் குடிநீர் திட்டத்திற்கு செயல்படுத்தப்படுகிறது  என்று கூறப்பட்டாலும் அங்கு 400க்கும் மேற்பட்ட மெகாவாட் மின் உற்பத்தியை தொடங்க அம்மாநில அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அங்கு மேகதாது அணை கட்டப்படும் பட்சத்தில் காவிரியில் இருந்து தமிழகத்திற்கு  திறந்து விடப்படும் நீர் கிடைக்காது. இதனால், தமிழக விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். 

Mekedatu Dam project report should be canceled... Tamil Nadu government petitions the Supreme Court!

இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்ற பின்பு கர்நாடக அரசின் அணை கட்டும் திட்டத்துக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானங்கள் நிறைவேற்றினார். ஒன்றிய நீர்வளத் துறை அமைச்சகத்திடம் முறையீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் மேகதாது அணை தொடர்பாக பிரதான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், நேற்று முன்தினம் டெல்லி வந்த அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை ஒன்றிய நீர்வளத் துறை அமைச்சரை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்;- மேகதாது அணை கட்டும் திட்டத்திற்கு அனுமதியை உடனடியாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இது தமிழக விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

Mekedatu Dam project report should be canceled... Tamil Nadu government petitions the Supreme Court!

இந்நிலையில் தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் உமாபதி மற்றும் குமரன் ஆகியோர் உச்சநீதிமன்ற ஒரு புதிய மனுவை தாக்கல் செய்துள்ளனர். அதில் மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் கர்நாடக அரசு வழங்கிய விரிவான திட்ட அறிக்கையை ரத்து செய்ய ஒன்றிய நிர்வாகி ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்.  இந்த திட்ட அறிக்கையை மீண்டும் கர்நாடக அரசிடம் திருப்பி அனுப்பிட வேண்டும். மேலும் எதிர்வரும் காலத்தில் மேகதாது விவகாரத்தில் கர்நாடக அரசு ஏதேனும் புதிய அறிக்கை சமர்ப்பித்தால் அதனை பரிசீலனை செய்ய ஒன்றிய சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்திற்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios