திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறுகிறது என திமுக தலைமை அறிவித்துள்ளது. மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு அனுமதி வழங்கியது குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

கர்நாடகா மாநிலம் காவிரியின் கறுக்கே மேகதாது என்ற பகுதியில் பகுதியில் 5000 கோடி ரூபாய் செலவில் புதிய அணை கட்டுவதற்கான கா்நாடகா அரசின் வரைவு அறிக்கைக்கு மத்திய அரசு நேற்று ஒப்புதல் வழங்கியது. இதன்மூலம் மேகதாதுவில் அணை கட்டுவதற்கான முதல்கட்ட ஆய்வு பணிகளை கா்நாடகா அரசு மேற்கொள்ள முடிவு செய்துள்ளது. 

மேகதாது அணை கட்டுவதற்கான வரைவுத் திட்டத்திற்கு மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்ததற்கு தமிழக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாகவும் தகவல் தெரிவித்தது. மேகதாது அணைக்கான வரைவு அறிக்கைக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியிருந்தார். இதற்கு தமிழக எதிர்கட்சிகளும் எதிர்ப்பு எதரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் மேகதாது அணை கட்டும் திட்டத்தை குறித்து விவாதிக்க திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நாளை காலை 10 மணிக்கு அனைத்துக்கட்சிக் கூட்டம் நடைபெறும் என திமுக தலைமை அறிவித்துள்ளது.