Mekathatu New Dam

மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம்…. சித்தராமையா திமிர் பேச்சு…

தமிழக அரசின் எதிர்ப்பை மீறி காவிரியின் குறுக்கே மேகதாட்டுவில் அணை கட்டப்பட்டும் என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலம், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்டி, அதன் மூலம் பெங்களூரு நகருக்கு குடிநீர் வினியோகம் செய்யவும், அங்கு நீர் மின்சாரம் உற்பத்தி நிலையம் அமைக்கவும் கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக சித்த ராமையா அரசு 5,912 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து பெங்களூரு காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சித்தராமையா, காவரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் விவகாரத்தில் தமிழக அரசு தேவையில்லாமல் அரசியல் செய்து வருவதாக தெரிவித்தார்.

மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தை செயல்படுத்துவதற்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று அவர் தெரிவித்தார்.

சட்ட ரீதியாகவோ, அரசியல் நீதியாகவோ இத் திட்டத்திற்கு எங்தவிதமான தடையும் இல்லை என்றும், மேகதாட்டு அணை திட்டத்தை கர்நாடக எல்லைக்குள் செயல்படுத்தி வருவதால் யாருடைய அனுமதியும் கர்நாடகத்திற்கு தேவைப்படாது என்றும் சித்தராமையா திமிராக பேசினார்.

காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பின்படி, காவிரியில் இருந்து தமிழகத்திற்கு ஆண்டுக்கு 192 டிஎம்சி தண்ணீர் வழங்கப்படும். வழக்கமான மழை பெய்தால் மட்டுமே அந்த அளவு தண்ணீரை தமிழகத்திற்கு வழங்க இயலும் என்றும் அவர் தெரிவித்தார்.

பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு குடிநீர் வழங்குவதற்காகவே மேகதாது அணை திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டிருப்பதாகவும், இதற்கு ஆட்சேபம் தெரிவிக்க தமிழக அரசுக்கு எந்தகாரணமும் இல்லை என்றும் சித்தராமையா கூறினர்ர்.

குடிநீர் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டியது கர்நாடக அரசின் கடமை என்பதால் மேகதாது அணை திட்டத்தை உறுதியாக செயல்படுத்துவோம் என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.