தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நடந்தது எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாட்டம். அந்தந்த மாவட்ட செயலாளர்கள், அம்மாவட்ட அமைச்சர்கள் அதனை முன்னின்று நடத்தினர். ஒருவழியாக இறுதி விழாவை எட்டி, சென்னையில் நேற்று அது முடிந்தது. 

நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடந்த இந்த பிரமாண்ட  கூட்டத்திற்க்கு பின்னணியில் கோடிக்கணக்கான பணத்தை கொட்டி கூட்டத்தை கூட்டி வரப்பட்டது கசிந்துள்ளது.எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை பிரமாண்டமாக நடத்த போடப்பட்ட மெகா பட்ஜெட் எதிர்கட்சியினரை தலை சுற்ற வைத்துள்ளது.

ஆமாம்! தமிழகம் ஒரு மாவட்டத்திற்கு 150 பேருந்துகள், 100 வேன்கள் வரவேண்டும் என அமைச்சர்களிடமும்  மாவட்ட செயலாளர்களிடமும், 4,800 பேருந்துகளும் 3,200 களிலும் சுமார் மூன்று லட்சம் பேரை விழாவுக்கு அழைத்து வர முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

இந்த  விழாவை பிரமாண்டமாக காட்டுவதற்காக  அழைத்து வரப்பட்ட ஆண்களுக்கு 300 ரூபாயும், பெண்களுக்கு 200 ரூபாயும் கொடுக்க தீர்மானித்துள்ளனர்.  மேலும்,  சாப்பாடு , பிரியாணி மற்றும் தண்ணீர் பாக்கெட்டுகள் வாங்கித்தரப்பட வேண்டும். இவைகளுக்காக மட்டும் சுமார் 10 கோடி ரூபாய் பட்ஜெட் . இந்த பணம் ,  ஆட்களை திரட்டி வரும் அமைச்சர்கள் அல்லாத மா.செ.க்களுக்கும்  பொறுப்பாளர்களுக்கும்   கொடுக்கப்பட்டதாம். 


 
ஆனால், நேற்றைய வரையில் ஆட்களைத் திரட்டுவதற்கான தொகை முழுமையாக செலவிடப்படவில்லை.  ஒதுக்கிய பணத்தை ஆட்டையை போடுவதிலும் குறியாக இருந்துள்ளனர்.  இது தவிர வாகன வாடகை, பேனர்கள், இருக்கைகள்,  அலங்காரங்கள், மேடை வடிவமைப்பு உள்ளிட்ட பல்வேறு வகையிலான செலவினங்களுக்காக 15 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது.  மொத்தம், 25 கோடி ரூபாய் பட்ஜெட்டில் நூற்றாண்டு விழாவை நடத்துகிறார் எடப்பாடி பழனிசாமி.