6 மாத தர்ம யுத்தத்திற்கு பிறகு அதிமுக தலைமை கழகத்திற்கு வந்த முன்னாள் முதலமைச்சர் ஒபிஎஸ், தற்போதைய முதலமைச்சர் எடப்பாடியுடன் கைக்குலுக்கி இணைந்தார்.

இதனை தொடர்ந்து புதிய அமைச்சரவை பட்டியலை ஆளுநர்  மாளிகை  வெளியிட்டது. அதன் படி, துணை முதல்வராக ஒ.பன்னீர்  செல்வமும், தமிழ்வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சராக மாபா பாண்டியராஜன் நியமிக்கப்பட்டனர்.இதனை  தொடர்ந்து  இருவருக்கும் தமிழக பொருபாளுனர் வித்யா சாகர், இன்று மாலை  4.30  மணிக்கு,  பதவி  பிரமாணம்  செய்து வைத்தார்.

இதற்கு அடுத்தபடியாக, இன்று மாலை 6 மணிக்கு தமிழக அமைச்சரவை கூடுகிறது   என்பது  குறிப்பிடத்தக்கது.இந்த  அமைச்சரவை கூட்டத்தில் பல முக்கிய  முடிவுகள் எடுக்கப்படும்  என  தகவல் வெளியாகி உள்ளது  

குறிப்பாக ஜெ.மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு,  மத்திய அரசுக்கு பரிந்துரைக்கலாம் என்றும், ஓய்வு பெற்ற நீதிபதியின் பெயர் அறிவிக்கபடலாம் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. தமிழக அரசியலில் அடுத்தடுத்து பல புதிய மாற்றங்கள் வந்துக்கொண்டே இருக்கிறது