சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா பதவியில் இருக்கும் என்னிடம் நேரடியாக லஞ்சம் கேட்டு நெருக்கடி தருவதாக பெண் அதிகாரி ஒருவர் நேற்று டிவியில் தோன்றி பரபரப்பு புகார் தெரிவித்தார்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ரிசர்வ் தொகுதி எம்.எல்.ஏவும் அமைச்சருமான சரோஜா தன்னிடம் லஞ்சம் கேட்டு கொடுமை படுத்தியதாக குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி மீனாட்சியிடம் லஞ்சம் கேட்டதாக பரபரப்பை கிளப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது :
“நான் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரியாக உள்ளேன். இதற்கு முன்பு குழந்தைகள் நலன் குறித்து சமூக ஆர்வலராக இருந்து வந்தேன்.

அதனால் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் ஒப்பந்த அடிப்படையில் இந்த பதவி எனக்கு வழங்கப்பட்டது. இந்த பதவிக்கு நான் பணம் எதுவும் கொடுக்கவில்லை.

இந்த பதவிக்கு 30 லட்சம் ரூபாய் வரை தருவதற்கு ஆட்கள் தயாராக இருக்கிறார்கள் என என்னிடம் கூறினார்கள்.

நீயாக பணியைவிட்டு ஓடிவிடு என்றும் இல்லையென்றால் உன்னுடைய கேரக்டரை அசிங்கபடுத்துவேன் எனவும் என்னை அமைச்சர் சரோஜாவும் அவரது கணவரும் என்னை மிரட்டுகிறார்கள்.

நீ வேலையை விட்டு ஓடும் வரை நான் உன்னை விட மாட்டேன் என்று கூறினார்கள்.

இவ்வாறு அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை மீனாட்சி அமைச்சர் சரோஜா மீது வைத்தார்.

இது நேற்று ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பியது.

அமைச்சர் சரோஜாவுக்கு எதிராக சமூக வலைதளங்களில் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்நிலையில் சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா தன்னை மிரட்டியது தொடர்பாக  குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி மீனாட்சி இன்று  சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.