Asianet News TamilAsianet News Tamil

பாகிஸ்தான் வெற்றியை சட்டையை கழற்றி வீசி கொண்டாடிய மருத்துவ கல்லூரி மாணவி..! வைரல் வீடியோ..!

 இந்தியாவை பாகிஸ்தான் வீழ்த்தியதை காஷ்மீரில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மாணவ-மாணவிகள் கொண்டாடினர்.

Medical college student takes off his shirt and celebrates Pakistan's victory ..! Viral video
Author
India, First Published Oct 26, 2021, 4:57 PM IST

டி20 உலகக்கோப்பையில் நேற்று முன்தினம் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்போட்டியில் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி 17.5 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 152 ரன்கள் எடுத்தது. இதனால், இந்தியாவை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றிபெற்றது.

Medical college student takes off his shirt and celebrates Pakistan's victory ..! Viral video

டி20 உலகக்கோப்பையில் இந்தியாவை பாகிஸ்தான் வீழ்த்தியதை பாகிஸ்தான் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சமூகவலைதளத்தில் இந்திய-பாகிஸ்தான் ரசிகர்கள் கருத்து மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில், உலகக்கோப்பை போட்டியில் இந்தியாவை பாகிஸ்தான் வீழ்த்தியதை காஷ்மீரில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மாணவ-மாணவிகள் கொண்டாடினர்.

காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகரில் உள்ள இரண்டு மருத்துவ கல்லூரி விடுதியில் மாணவர்கள் மற்றும் மாணவிகள் கிரிக்கெட் பார்த்துள்ளனர். அப்போது, இந்திய அணியை பாகிஸ்தான் வீழ்த்தியதை கண்டதும் இரண்டு கல்லூரிகளிலும் மாணவர்கள் சந்தோஷத்தில் ஆர்ப்பரிக்கின்றனர்.Medical college student takes off his shirt and celebrates Pakistan's victory ..! Viral video


அப்போது, சில மாணவர்கள் இந்தியாவிற்கு எதிரான கோஷங்களை எழுப்புகின்றனர். மேலும், சிலர் பாகிஸ்தானுக்கு ஆதரவான கோஷங்களை எழுப்புகின்றனர். இதை அங்கிருந்த சில மாணவர்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். பாகிஸ்தானின் வெற்றியை ஸ்ரீநகர் மாணவர்கள் கொண்டாடும் இந்த வீடியோ சமூக வலைதளங்கிளில் வைரலாகியது. அந்த வீடியோவில் இந்தியாவிற்கு எதிரான வாசகங்கள் இருப்பதை கண்டு பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து, ஸ்ரீநகரில் உள்ள சௌரா காவல் நிலையம் மற்றும் கரண்நகர் காவல் நிலையத்தில் அந்த கல்லூரிகளின் விடுதி வார்டன், கல்லூரி மாணவர்கள், ஊபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு மருத்துவ கல்லூரிகளில் ஒன்று அரசு மருத்துவ கல்லூரி ஆகும். மற்றொரு கல்லூரியின் பெயர் ஷேர்-இ-காஷ்மீர் மருத்துவ கல்வி நிறுவனம் ஆகும்.

இதுதொடர்பாக, காஷ்மீர் ஐ.ஜி. விஜயகுமார், இந்தியாவிற்கு எதிராக கோஷமிட்டவர்கள் மீது நாங்கள் வழக்குப்பதிவு செய்துள்ளோம் என்றார். அதேசமயம், காஷ்மீர் போலீசார் சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோக்களில் சில வீடியோக்கள் 2017ம் ஆண்டு எடுக்கப்பட்டவை. சில வீடியோக்கள் மட்டுமே கடந்த ஞாயிற்றுக்கிழமை எடுக்கப்பட்டவை. அந்த வீடியோக்களின் அடிப்படையிலே ஊபா சட்டத்தின் கீழ் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்றனர். ஊபா என்பது சட்டவிரோத நடவடிக்கை தடுப்புச்சட்டம் என்பது ஆகும். நாட்டின் இறையாண்மைக்கு எதிராக செயல்படுபவர்கள் மீது ஊபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படும். Medical college student takes off his shirt and celebrates Pakistan's victory ..! Viral video

இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், 'பாகிஸ்தானின் வெற்றியைக் கொண்டாடிய காஷ்மீரிகள் மீது ஏன் இவ்வளவு கோபம்? சிலர் கொலைவெறிக் கோஷங்களையும் எழுப்புகிறார்கள். துரோகிகளைச் சுட வேண்டும் என்று கூறுகிறார்கள். காஷ்மீர் துண்டாக்கப்பட்டு, சிறப்பு அந்தஸ்து பறிக்கப்பட்டபோது எத்தனை பேர் இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள் என்பதை யாரும் மறந்துவிடவில்லை’ என்று மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.

 

இந்நிலையில், மெகபூபா முப்தியின் கருத்துக்கு ஜம்மு-காஷ்மீர் பாஜக தலைவர் ரவீந்தர் ரைனா கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ரானா கூறுகையில், ,மெகபூபா முப்தி ‘தலீபானிய எண்ணங்களுடன்’ உள்ளார். டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தானின் வெற்றியை கொண்டாடுபவர்கள் நாட்டுக்கு எதிராக சதி செய்ததாக சிறையில் தள்ளப்படுவார்கள்’ என்றார்.

Follow Us:
Download App:
  • android
  • ios