மருத்துவ கல்லூரி மாணவி சாவுக்கு சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் சும்மா விடக்கூடாது.. டிடிவி.தினகரன்..!

மருத்துவக் கல்லூரியின் பேராசிரியர் ஒருவர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக உயிரிழந்த மாணவி கைப்பட எழுதிய கடிதம் ஒன்று கிடைத்திருப்பதாக காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Medical college student commits suicide..Whoever is involved should not be left alone.. TTV.Dhinakaran tvk

தனியார் மருத்துவக் கல்லூரி மாணவி கல்லூரி வளாக விடுதியிலேயே மர்மமான முறையில் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது என டிடிவி.தினகரன் கூறியுள்ளார். 

தூத்துக்குடி வி.டி.சி. நகரைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மகள் சுகிர்தா (27). இவர் குமரி மாவட்டம் குலசேகரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி ஒன்று தங்கி படித்து வருகிறார். இவர் கடந்த 6ம் தேதி கல்லூரிக்கு செல்லாமல் விடுதிலேயே தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவர் தற்கொலை செய்வதற்கு முன் கல்லூரி மாணவி எழுதிய கடிதம் சிக்கியது. அதில், தனது தற்கொலைக்கு ஒரு பெண் பேராசிரியர் உள்பட 3 பேராசிரியர்கள் காரணம் என்றும் ஆண் பேராசிரியர் உடலளவிலும், மனதளவிலும் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் குறிப்பிட்டிருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், மருத்துவ மாணவி உயிரிழப்பு வழக்கில் காவல்துறையினர் உரிய விசாரணை நடத்த வேண்டும் என தமிழ்நாடு அரசை டிடிவி.தினகரன் கேட்டுக் கொண்டுள்ளார். 

இதையும் படிங்க;- விடுதியில் மருத்துவ மாணவி தற்கொலை! சிக்கிய கடிதம்! அவங்க 3 பேரும் தான்! அவரு பாலியல் ரீதியாக இப்படி செய்தாரு.!

Medical college student commits suicide..Whoever is involved should not be left alone.. TTV.Dhinakaran tvk

இதுதொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்;- கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பகுதியில் இயங்கி வரும் தனியார் மருத்துவக் கல்லூரியில் முதுகலை 2 ஆம் ஆண்டு படித்துவந்த மாணவி, கல்லூரி வளாக விடுதியிலேயே மர்மமான முறையில் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

Medical college student commits suicide..Whoever is involved should not be left alone.. TTV.Dhinakaran tvk

மருத்துவக் கல்லூரியின் பேராசிரியர் ஒருவர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக உயிரிழந்த மாணவி கைப்பட எழுதிய கடிதம் ஒன்று கிடைத்திருப்பதாக காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும், தனது மகள் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும் என உயிரிழந்த மாணவியின் தந்தை காவல்நிலையத்தில் புகார் அளித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க;-  கிரீன் சிக்னல்? தமிழகத்தில் பாஜக தலைமையில் 3வது அணி? டெல்லி செல்லும் ஓபிஎஸ் - டி.டி.வி.தினகரன்?

Medical college student commits suicide..Whoever is involved should not be left alone.. TTV.Dhinakaran tvk

எனவே, மருத்துவ மாணவி உயிரிழப்பு வழக்கில் காவல்துறையினர் உரிய விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, கல்லூரிகளில் மாணவிகள் சுதந்திரமான முறையில் கல்வி பயில ஏதுவான சூழல் நிலவுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசை கேட்டுக் கொள்கிறேன் என டிடிவி.தினகரன் கூறியுள்ளார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios