பிகில் படத்தில் விஜய் தங்களை அவமானப்படுத்திவிட்டதாக கூறி, போராட்டத்தில் குதித்த கோவையை சேர்ந்த இறைச்சிக்கடை வியாபாரிகளை, விஜய் ரசிகர்கள் சமாதானப் படுத்தி போராட்டத்தை வாபஸ்பெற வைத்துள்ளதுதான் சினிமா வட்டாரத்தில் இப்போது ஹாட்டாபிக்... 

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பிகில் படத்தின்  இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது அப்போது பேசிய விஜய் தமிழக அரசை கடுமையாக விமர்சித்து கருத்து தெரிவித்தார். இதனால் கடும் கோபத்திற்கு ஆளான தமிழக அமைச்சர்கள் விஜய்க்கு எதிராக பேட்டி மேல் பேட்டி கொடுத்து விஜய்யை நாராக கிழித்து தொங்க விட்டனர். இந்நிலையில் விஜய்க்கு எதிராக கோவையை சேர்ந்த கறிக்கடை வியாபாரிகள் போராட்டத்தில் இறங்கி இருக்கின்றனர்.அதாவது பிகில் பட போஸ்டரில் தாங்கள் இறைச்சி வெட்ட பயன்படுத்தும் கறிக் கட்டையின் மீது செருப்பணிந்த  கால் வைத்து போஸ் கொடுத்துள்ளார் விஜய், 

இது  தங்களையும் தங்கள் தொழிலையும் அவமானப்படுத்துவதாக உள்ளது எனக்கூறி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே பிகில்பட போஸ்டரை கிழித்து  போராட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன் மாவட்ட ஆட்சியரிடமும் விஜய் தங்களை அவமதித்து விட்டதாக கூறி புகார் அளித்தனர். இதைக் கேள்விப்பட்ட விஜய்,  உடனே போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கறிக்கடை வியாபாரிகளை நேரில் சந்தித்து சமாதானப்படுத்தும் படி கோவை ரசிகர்களுக்கு உத்தரவிட்டார். இதனையடுத்து அங்கு பதறி அடித்து ஓடிய விஜய் ரசிகர்கள் கறிக்கடை  வியாபாரிகளின் கையைப்பிடித்து, இத்துடன் இந்த விஷயத்தை விட்டுவிடுங்கள் இதை பெரிது படுத்த வேண்டாம், உங்களிடம் நேரில் மன்னிப்பு கேட்க சொல்லி தளபதியே அனுப்பி இருக்கிறார் என்று கெஞ்சினர். இதில் சமாதானம் அடைந்த இறைச்சிக் கடைக்காரர்கள் போராட்டத்தை கைவிடுவதாக  அறிவித்துள்ளார்கலாம்.