mdmk will alliance with dmk

இனிவரும் காலங்களிலும் திமுகவுடனான மதிமுகவின் கூட்டணி தொடரும் என அக்கட்சியின் உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

திமுகவை எதிர்த்து அரசியல் செய்து வந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுகவிற்கு ஆதரவளித்தார். மதவாத சக்திகளுக்கு எதிராக போராடி மாநில சுயாட்சிக்கு வலுவூட்டும் விதமாக திமுகவிற்கு ஆதரவளிப்பதாக வைகோ தெரிவித்தார்.

இந்நிலையில், இனிவரும் காலங்களிலும் திமுகவுடன் கூட்டணி தொடரும் என அக்கட்சியின் உயர்நிலைக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் அக்கட்சியின் உயர்நிலைக்குழு மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை எழும்பூரிலுள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

அந்த கூட்டத்தில், ஓகி புயலால் பாதிக்கப்பட்ட குமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வேண்டும், திராவிட இயக்கத்தை காக்கவும் மாநில சுயாட்சிக்கு வலுவூட்டவும் வரும் காலங்களில் திமுகவுடன் கூட்டணி தொடரும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதன்படி, உள்ளாட்சித் தேர்தல், 2019 மக்களவைத் தேர்தல், அடுத்த சட்டமன்ற தேர்தல் ஆகியவற்றில் திமுகவுடனான மதிமுக கூட்டனி உறுதியாகியுள்ளது.