மதுக்கடைகளுக்கு எதிராக மக்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதாகவும், மக்கள் கிளர்ச்சியை அடக்க தமிழக அரசு முயற்சிக்க வேண்டாம் எனவும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

தேச துரோக வழக்கில் கடந்த ஏப்ரல் 3 ஆம் தேதி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதைதொடர்ந்து இன்று காலை ஜாமினில் வைகோ விடுதலை செய்யபட்டார்.

வெளிவந்த வைகோவிற்கு மதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதையடுத்து  வைகோ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

கட்சி நிர்வாகிகள் வற்புறுத்தியதால் ஜாமீனுக்கு ஒப்புக்கொண்டேன். இந்த சிறைவாசம் என்னை மேலும் பக்குவபடுத்தியுள்ளது.

அதிமுக அரசு ஓராண்டுக்குள் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகிறது.

மதுக்கடைகளை அரசால் இனி நடத்த முடியாது. மக்கள் எழுச்சியை புரிந்து கொண்டு தமிழக அரசு மதுக்கடைகளை இழுத்து மூட வேண்டும்.

மதுக்கடைகளை எதிர்த்து போராடியவர்கள் மீது தடியடி நடத்தியது மிகவும் கண்டனத்திற்குரியது.

மக்கள் எழுச்சியை அடக்க தமிழக அரசு நினைக்க கூடாது. சீமை கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பள்ளி கல்வி முறையில் நல்ல மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.