புதிய கல்விக் கொள்கை அல்ல, அது புதிய புல்டோசர் கொள்கைஎன மாநிலங்கள் அவையில் மதிமுக பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வைகோ கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.  

இன்று 21.11.2019 மாநிலங்கள் அவை கேள்வி நேரத்தின் போது புதிய கல்விக் கொள்கை குறித்த கேள்வி வந்தது. அப்போது, மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் எழுந்து குறுக்கிட்டார்.அவைத்தலைவர் அவர்களே, நீங்களும், நானும், பல்லாயிரக்கணக்கானவர்களும் நெருக்கடி நிலை காலத்தில் கொடும் சிறைகளில் வாடியபோது, இந்தக் கல்வித் துறையை மாநிலப் பட்டியலில் இருந்து எடுத்து, பொதுப்பட்டியலுக்கு மாற்றி, அதிகாரங்களை மத்திய அரசு கபளீகரம் செய்துகொண்டது.என்றார், இது புதிய கல்விக் கொள்கை அல்ல; மாநில அரசுகளின் உரிமைகளைத் தகர்த்துத் தரைமட்டமாக்குகின்ற புதிய புல்டோசர் கொள்கை ஆகும்.என்றார். 

அப்போது குறுக்கிட்ட அவைத் தலைவர் வெங்கையா நாயுடு, உங்கள் கேள்விக்கு வாருங்கள். வைகோ என்றார்,  நாட்டிற்கு நாசம் விளைவிக்கும் இந்தப் புதிய கல்விக் கொள்கை குறித்து அனைத்து மாநில அரசுகளோடும் விரிவான விவாதம் நடத்தினீர்களா? மாநில அரசுகளின் கருத்துகளைப் பெற்றீர்களா? இல்லை.  அப்படிப் பெற்றிருந்தால் எந்தெந்த மாநிலங்கள் எதிர்ப்புத் தெரிவித்தன என அறிந்துகொள்ள விரும்புகின்றேன் என்றார்,  அப்போது இந்தியா முழுவதும் கல்வியாளர்களோடு நாங்கள் விவாதங்கள் நடத்தி இருக்கிறோம் என்று அமைச்சர் சுற்றி வளைத்துப் பேசினார். 

அதற்கு  வைகோ,  எந்தெந்த மாநிலங்கள் எதிர்ப்புத் தெரிவித்தன. என் கேள்விக்குப் பதில் இல்லையே! என்றார். அப்போது குறுக்கிட்ட அவைத் தலைவர் வெக்கையா நாயுடு:  உங்கள் வாய்ப்பு முடிந்துவிட்டது  நீங்கள் மூத்த உறுப்பினர். இதற்குமேல் கேட்கக்கூடாது. என்றார்,  அதற்கு பதில் அளித்த வைகோ,  உறுப்பினரின் உரிமையையும் தாங்கள்தானே காக்க வேண்டும். என் கேள்விக்கு அமைச்சர் பதில் சொல்லவே இல்லையே!என்றார் இப்படியாக விவாதம் காரசாரமாக நடைபெற்றது.