நியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மதுரையில் நடைப்பயணம் தொடங்குகிறார். இந்த நடைப்பயணத்தில் மதிமுக தொண்டர் ஒருவர் தீக்குளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தேனி மாவட்டம் பொட்டிபுரம் பகுதியில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. இந்த திட்டத்திற்கு தேனி மாவட்ட மக்கள், விவசாயிகள், அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கான எதிர்ப்பைப் போலவே நியூட்ரினோ திட்டத்திற்கும் தமிழக அளவில் கடும் எதிர்ப்புகள் நிலவுகின்றன.

இந்நிலையில், நியூட்ரினோ திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விழிப்புணர்வு நடைப்பயணத்தை மதுரையில் வைகோ தொடங்கினார். இந்த பயணத்தை ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

இந்த நடைப்பயணம் தொடங்கும் முன்பாக ரவி என்ற மதிமுக தொண்டர் தீக்குளித்தார். இதனால் பரபரப்பு நிலவியது. இதையடுத்து உடனடியாக தீக்குளித்த ரவி என்ற நபர் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.