Asianet News TamilAsianet News Tamil

வாரிசு அரசியலுக்கு இடம் கொடுக்காத வைகோ... மகனை விட மல்லை சத்யாவுக்கு வாய்ப்பு கொடுத்து அசத்தல்...!

திமுக கூட்டணியில் மதிமுக போட்டியிடும் 6 தொகுதிகள் எவை என்பது இறுதி செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானா நிலையில் தற்போது வேட்பாளர் குறித்த விவரம் வெளியாகியுள்ளது. 

MDMK candidates list released
Author
Tamil Nadu, First Published Mar 11, 2021, 11:20 AM IST

திமுக கூட்டணியில் மதிமுக போட்டியிடும் 6 தொகுதிகள் எவை என்பது இறுதி செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானா நிலையில் தற்போது வேட்பாளர் குறித்த விவரம் வெளியாகியுள்ளது. 

திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள அனைத்து கட்சிகளுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நிறைவடைந்துள்ளது. திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. சிபிஐ, சிபிஎம், விசிக, மதிமுக ஆகிய கட்சிகளுக்கு தலா 6 தொகுதிகளும், இ.யூ.முஸ்லிம் லீக், கொமதேகவுக்கு  தலா 3 தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டன. 

MDMK candidates list released

அதேபோல், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, ஆதித்தமிழர் பேரவை, மக்கள் விடுதலை கட்சி, பார்வார்டு பிளாக் கட்சிக்கு தலா ஒரு தொகுதியும் திமுக கூட்டணியில் ஒதுக்கப்பட்டன. இந்த வகையில் 61 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு திமுக ஒதுக்கீடு செய்துள்ளது. எனவே, எஞ்சிய 174 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. தொகுதி பங்கீடு முடிவடைந்திருக்கும் நிலையில் கூட்டணி கட்சிகள் போட்டியிட உள்ள தொகுதிகள் இறுதி செய்யப்படும் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்ட 6 தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வாசுதேவநல்லூர் (தனி), சாத்தூர், அரியலூர், பல்லடம், மதுராந்தகம் (தனி), மதுரை தெற்கு ஆகிய தொகுதிகளில் மதிமுக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட உள்ளது.

MDMK candidates list released

இந்நிலையில், மதிமுக சார்பில் 6 தொகுதிகளில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம் தலைமை அலுவலகத்தில் இன்று நேர்காணல் நடைபெற்று வருகிறது. இதில், மதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. இதனிடையே, சாத்தூர் தொகுதியில் வைகோவின் மகன் துரை வைகோ போட்டியிட உள்ளதாக தகவல் வெளியான நிலையில் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. 

மதிமுக வேட்பாளர் பட்டியல்;-

*  சாத்தூர் - டாக்டர் ரகுராம்

*  வாசுதேவநல்லூர் ( தனி) - சதன் திருமலைக்குமார்

* மதுரை தெற்கு - புதூர் பூமிநாதன்

*  பல்லடம் - மோகன்குமார் அல்லது ஈஸ்வரன்

*  அரியலூர் - சின்னப்பா

*  மதுராந்தகம்(தனி) - மல்லை சத்யா

Follow Us:
Download App:
  • android
  • ios