Asianet News TamilAsianet News Tamil

தலைவா கடனாளி ஆகாம என்ன காப்பாத்திட்டீங்க !! மதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதை போஸ்டர் ஒட்டி கொண்டாடிய நிர்வாகி !!

ராமநாதபுரம் மாவட்ட மதிமுக இளைஞரணி அமைப்பாளர் அரு.சுப்ரமணியன் என்பவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதையடுத்து, தன்னை கட்சியில் இருந்து நீக்கிய வைகோவுக்கு நன்றி தெரிவித்து போஸ்டர் அடித்து ஒட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

MDMK cader expell in the party
Author
Ramanathapuram, First Published Sep 21, 2019, 11:02 AM IST

தமிழர் தொடர்பான பிரச்சனைகள், ஈழத்தமிழர்களுக்கான பிரச்சனைகள் என மதிமுக பொதுச் செயலாளரின் அதிரடி நடவடிக்கைகளால் ஈர்க்கப்பட்ட ராமநாதபுரத்தைச் சேர்ந்த அரு.சுப்ரமணியன் என்பவர் கடந்த 2012 ஆம் ஆண்டு வைகோவைச் சந்தித்து தன்னை மதிமுவில் இணைத்துக் கொண்டார்.

அரு.சுப்ரமணியன் பெரும் பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவர். விவசாய நிலங்கள், கடைகள் என செல்வாக்குடன் வாழ்ந்து வருபவர். மேலும் ராமநாதபுரத்தில் இரு சக்கரவாகன ஏஜென்சியும் நடத்தி வருகிறார்.

MDMK cader expell in the party

கட்சியில் இவரது செயல்பாடுகளை பார்த்த வைகோ அவருக்கு ராமநாதபுரம் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பதவியும் வழங்கினார். குறுகிய காலத்தில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வைகோ மனதிலும் இடம் பிடித்தார்.

இந்நிலையில், கடந்த மக்களவை தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்ட இந்திய யூனியன் முஸ்லீம் கட்சி வேட்பாளர் நவாஸ்கனிக்கு ஆதரவாக சுப்பிரமணியன் செயல்படவில்லை என்றும், அமமுக வேட்பாளருக்கு ஆதரவாக செயல்படுகிறார் என்றும் அவர் மீது புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து வைகோவின் உதவியாளர் அருணகிரி, சுப்பிரமணியனிடம் இது குறித்து விசாரரித்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறபடுகிறது.

MDMK cader expell in the party

இதையடுத்து மதிமுகவில் இருந்து அரு.சுப்பிரமணியன் நீக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது. இதைத் தான் நானும் எதிர்பார்த்தேன் என்கிற வகையில், அரு. சுப்பிரமணியன் ஒரு போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளார். அதில், கடனாளி ஆக்காமல் கட்சியை விட்டு என்னை நீக்கியதற்கு வைகோவுக்கு நன்றி எனவும் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios