பிரதமர் பதவிக்கு தயாரான மாயாவதி..! 

உத்திரபிரதேச மாநிலத்தில் மேற்கொண்ட பிரச்சாரத்தில் கலந்து கொண்ட பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, தான் பிரதமர் பதவியை ஏற்க தயார் என சவால் விடுத்துள்ளார். கடந்த மார்ச் மாதம் செய்தியாளர்கள் சந்திப்பின்போது, பிரதமர்  வேட்பாளராக களமிறங்க அப்போதே ஆயத்தம் ஆவதை உணர்த்தும் வகையில் பேசி இருந்தார் மாயாவதி 

இந்நிலையில், மக்களவை தேர்தலில் அவர் போட்டியிடாததால் பகுஜன் சமாஜ் கட்சி தொண்டர்களிடையே பெரும் குழப்பம் நிலவி வந்தது. அவருடைய ஆதரவாளர்களும் விரக்தி அடைந்தனர். இதற்கிடைப்பட்ட நேரத்தில் உத்திரபிரதேச மாநிலம் அம்பேத்கர் நகரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மாயாவதி மக்களவைத் தேர்தலில் தான் போட்டியிடாததை கண்டு, தொண்டர்கள் யாரும் கவலைப்பட வேண்டாம்.

பிரதமர், மத்திய அமைச்சராக தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் 6 மாதத்திற்குள் நாடாளுமன்ற உறுப்பினராக வேண்டும் என்ற சட்டம் இருக்கின்றது. அதன்படி என்னால் எம்பி ஆக முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்து உள்ளார். ஆக தேர்தலில் போட்டியிடவில்லை என்றாலும் பிரதமர் வேட்பாளராக இருக்க மாயாவதி விருப்பப்படுகிறார் என்பதை இதன் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 

ஆனால் காங்கிரஸ் தரப்பிலிருந்து ராகுல் காந்தியே பிரதமர் வேட்பாளராக இருக்க வேண்டும் என்ற பேச்சுவார்த்தையும் இருந்து வருகிறது. இதற்கு முன்னதாக திமுக தலைவர் ஸ்டாலின் பிரதமர் வேட்பாளர் ராகுல் தான் என அறிவித்து இருந்தார். அப்போது மற்ற கூட்டணி காட்சிகள் ராகுலை பிரதமர் வேட்பாளராக ஏற்க மறுப்பு தெரிவித்து  இருந்தனர். 

இந்நிலையில் தான் மாயாவதி பிரதமர் பதவியை ஏற்க தயார் என்று சவால் விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.