Asianet News TamilAsianet News Tamil

உள்ளாட்சி தேர்தலை மே.14 க்குள் நடத்த வேண்டும் - உயர்நீதிமன்றம் உத்தரவு 

may14 dead-line-for-local-body-election---high-court-or
Author
First Published Feb 21, 2017, 1:56 PM IST


உள்ளாட்சித் தேர்தலை  மே.14 க்குள்  நடத்த என தேர்தல் ஆணையத்துக்கு  சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


உள்ளாட்சித்தேர்தலில்  பழங்குடியினருக்கான ஒதுக்கீடு  சரியான வரையரை இல்லை என்பன உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை வைத்து திமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கு தனி நீதிபதி கிருபாகரன் முன்பு விசாரணைக்கு வந்த போது அவர் உள்ளாட்சி தேர்தலுக்கு தடை விதித்தார்.

பின்னர் பல கட்டங்களை தாண்டி வந்த இந்த வழக்கு  இரண்டு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றபட்டது.  தனி நீதிபதி உத்தரவை அமல்படுத்துவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதது. வேட்பாளர்களின் விபரங்களை இணைய தளத்தில் வெளியிடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

தேர்தல் தேதி வெளியிட சிக்கல் உள்ளது என்ற தேர்தல் ஆணைய முறையீட்டை ஏற்க மறுத்த நீதிபதிகள் விரைவில் தேர்தல் தேதியை அறிவிக்க உத்தரவிட்டனர்.

இதையடுத்து இன்று தேர்தல் ஆணைய வழக்கறிஞர்.பி.குமார்  நீதிபதிகள் நூட்டி மோகனராவ், எஸ்.எம். சுப்பிரமனியன்  முன் ஆஜராகி  மே.15 க்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதாக  கூறினார்.

இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள் முறையான தேதியுடன் வருமாறு கூறி வழக்கை இன்று ஒத்திவைத்தனர். இந்நிலையில் வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பி. குமார் மார்ச் , தனி நீதிபதி உத்தரவை நடைமுறைப்படுத்த கால தாமதம் ஏற்படுகிறது,  ஏப்ரல் மாதங்களில் பள்ளித்தேர்வு உள்ளது என்பதால் தேர்தலை நடத்த முடியாது. மே.15 க்குள் நடத்த முடியும் என்று கேட்டுகொண்டார்.

திமுக தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வில்சன் தேர்வுகள் ஏபரல் மாதத்தில் முடிவடைந்து விடுகிறது. ஏற்கனவே 8 மாதம் ஆகிவிட்டது  ஆகவே உடனடியாக தேதியை அறிவிக்க வேண்டும் என கேட்டு கொண்டார்.

தேர்தலை ஆணைய வழக்கறிஞர் குமார் , ஏப்ரம் மாதத்திற்கு மேல் வினாத்தாள் திருத்தும் பணி உள்ளது என்று தெரிவித்தார். இதை ஏற்றுகொண்ட நீதிபதிகள் குமார்  நீதிபதிகள் நூட்டி மோகனராவ், எஸ்.எம். சுப்பிரமனியன்  உள்ளாட்சி தேர்தல் வழக்கில் இடைக்கால உத்தரவை பிறப்பித்தனர்.

 அதன்படி மே.14 க்குள் தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்தி முடித்துவிட வேண்டும்.தனி நீதிபதி வழக்கு மார்ச் 1 முதல் நடக்கும். அதற்கு ஏற்ப உத்தரவுகள் தனியாக பிறப்பிக்கப்படும்.

மே.14 க்குள் தேர்தலை நடத்தி முடிக்க மாநில தேர்தல ஆணையத்துடன் மாநில அரசு இணைந்து செயல்பட வேண்டும் என்று நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios