சென்னை மாநகராட்சி பள்ளிகளில் சில பள்ளிகளில் பெண் பிள்ளைகளுக்கு சானிட்டரி நாப்கின் வழங்கப்பட்டு வருகிறது, இந்நிலையில் மாநகராட்சி நிதிநிலை அறிக்கையில் அனைத்து பள்ளிகளுக்கும் அதை வழங்குவதற்கான அறிவிப்பு வெளியிடப்படும் என்ற அவர். அது எத்தனை பெண் குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் உள்ளிட்ட விவரங்கள் விரைவில் நிதி நிலை அறிவிப்பில் இடம்பெறும் என தெரிவித்தார். அவரின் இந்த தகவலை பலரும் வரவேற்று பாராட்டி வருகின்றனர்.
சென்னை மாநகராட்சிப் பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு இலவசமாக சானிட்டரி நாப்கின் வழங்கப்படும் என சென்னை மாநகராட்சி மேயர் பிரியா அறிவித்துள்ளார். வரும் மாநகராட்சி நிதிநிலை அறிக்கையில் இதற்கான நிதி ஒதுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். அவரிட் இந்த அறிவிப்பு இது மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
அதிமுக ஆட்சியில் இருந்தவரை உள்ளாட்சித் தேர்தல் என்பதே நடத்தப்படாமல் இருந்து வந்தது. அதனால் மக்களுக்கு அடிப்படை பிரச்சனைகள் தீர்வு காண்பதில் பெரும் சிக்கல் இருந்து வந்தது, அதிமுகவின் தோல்விக்கு இது முக்கிய காரணமாகவும் கூறப்பனுகிறது. தற்போது திமுக ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்து அதற்கான பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் தேங்கிக்கிடந்த உள்ளாட்சி பணிகள் வேகமாக நடந்து வருகிறது. அந்த வகையில் பல ஆண்டுகள் கழித்து சென்னை சென்னை மாநகராட்சி மேயராக இளம் பட்டதாரி பெண் பிரியா ராஜன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். முதல்முறையாக, சென்னை மாநகராட்சி மன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள தலித் பெண் மேயர் இவராவார்.

மேயராக தேர்வு செய்யப்பட்டது முதலே பிரியா பல அதிரடி நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறார். சென்னை மாநகராட்சி வார்டு வாரியாக கள ஆய்வு செய்து வரும் இவர் மக்களின் குறைகளை கேட்டறிந்து வருவதுடன், சாலை குடிநீர் கழிவுநீர் வெளியேற்றுதல் உள்ளிட்ட அடிப்படைக் கட்டமைப்புகளை சரி செய்வதே தனது முதல் இலக்கு என கூறியுள்ளார். சிங்காரச் சென்னை 2.0 திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்றும் அவர் கூறிவருகிறார்.இந்நிலையில் ஜாபர்கான்பேட்டை உள்ள சென்னை மாநகராட்சி பள்ளியில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் ஆகியோர் இன்று திறந்து வைத்தனர். இதில் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந் நிகழ்ச்சியில் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மேயர் பிரியா

சென்னை மாநகராட்சி நிதிநிலை அறிக்கை 2022-23 தாக்கல் செய்யும் தேதி இதுவரை முடிவு செய்யப்படவில்லை என்றும், இன்றும் நாளையும் அதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது என்றும், இந்த கூட்டத்திற்கு பிறகு எப்போது நிதிநிலை கூட்டம் உள்ளிட்டவை குறித்து தேதிகள் இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்படும் என்றார். சென்னை மாநகராட்சி பள்ளிகளில் சில பள்ளிகளில் பெண் பிள்ளைகளுக்கு சானிட்டரி நாப்கின் வழங்கப்பட்டு வருகிறது, இந்நிலையில் மாநகராட்சி நிதிநிலை அறிக்கையில் அனைத்து பள்ளிகளுக்கும் அதை வழங்குவதற்கான அறிவிப்பு வெளியிடப்படும் என்ற அவர். அது எத்தனை பெண் குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் உள்ளிட்ட விவரங்கள் விரைவில் நிதி நிலை அறிவிப்பில் இடம்பெறும் என தெரிவித்தார். அவரின் இந்த தகவலை பலரும் வரவேற்று பாராட்டி வருகின்றனர்.
