Mathusudhanana? Palakangava? Who is RK Nagar?
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் யார் போட்டியிடுவது என்பது குறித்து அதிமுகவில் முடிவெடுக்கப்படாத நிலையில், சென்னையின் பல இடங்களில் பாலகங்காவுக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இதனால் அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த மார்ச் மாதம் நடைபெறவிருந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், பணப்பட்டுவாடா காரணமாக நிறுத்தப்பட்டது. இந்த நிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரும் 21 ஆம்தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வேட்பாளரை தேர்வு செய்வதில் அதிமுகவில் உச்சகட்ட குழப்பம் நிலவி வருகிறது. ஏற்கனவே வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மதுசூதனன் களமிறக்கப்படுவாரா? அல்லது வேறு வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவாரா என்ற குழப்பம் நிலவி வருகிறது.
இந்த நிலையில், மதுசூதனனுக்கு போட்டியாக பாலகங்கா வேட்பாளராக அறிவிக்கும் வகையில் சென்னையின் பல்வேறு இடமங்களில் போஸ்டர் ஒட்டி உள்ளது. இதனால் அதிமுகடிவல் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இதனைப் பார்க்கும்போது, மதுசூதனனுக்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
மதுசூதனனை மீண்டும், ஆர்.கே.நகர் தேர்தலில் வேட்பாளராக நிறுத்த ஓ.பி.எஸ். தரப்பு கூறி வரும் நிலையில், அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதில் யாருக்கு செல்வாக்கு அதிகமாக உள்ளது; யாரை நிறுத்தினால் வெற்றி வாய்ப்பு கிடைக்கும் என்ற அடிப்படையில் வேட்பாளர் உறுதி செய்யப்படுவார். அதன் பிறகே வேட்பாளரின் பெயர் அறிவிக்கப்படும.
மதுசூதனனுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளதால் பாலகங்கா, கோகுல இந்திரா ஆகியோரில் ஒருவருக்கு வழங்கப்படலாம் என்று பேச்சும் தற்போது எழுந்துள்ளது.
மதுசூதனன், பாலகங்கா, கோகுல இந்திரா உட்பட 27 பேர் விருப்பமனு தாக்கல் செய்துள்ளனர். இன்று வேட்பாளரை அறிவிக்க அதிமுக திட்டமிட்டிருந்த நிலையில், ஆட்சிமன்ற குழுக் கூட்டம் திடீரென ஒத்திவைக்கப்பட்டது. டிசம்பர் 1 ஆம தேதி ஆட்சி மன்ற குழு கூடி வேட்பாளரை தேர்ந்தெடுக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில், பாலகங்காவுக்கு ஆதரவு தெரிவித்து சென்னையின் பல இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இதனால் அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
