முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சசிகலாவை எதிர்த்த பிறகு அதிமுக இரு அணிகளாக பிரிந்துள்ளது.
அதிமுக-வின் அவைத் தலைவர் மதுசூதனன், முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்.
இந்நிலையில், அதிமுக-வின் அடிப்படை உறுப்பினர், அவைத் தலைவர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் மதுசூதனன் நீக்கப்படுவதாக அதிமுக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா உத்தரவிட்டார்.
கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாகக் கூறி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து தற்காலிக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலா நீக்கபடுவதாக மதுசூதனன் அதிரடியாக அறிவித்தார்.
இந்நிலையில் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அவைத்தலைவர் மதுசூதனன் கூட்டாக சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய மதுசூதனன், “நீ என்னடா சொல்றது” என்ற சினிமா பாணியில் அதிமுக பொதுசெயலாளர் பதவிலிருந்து சசிகலாவை நீக்குவதாக அதிரடியாக தெரிவித்தார்.
மேலும் தற்காலிக பொதுச்செயலாளர் என்பது அதிமுக வரலாற்றிலே கிடையாது எனவும், பொதுசெயலாளர் பதவிக்கான தேர்வு விரைவில் நடத்தப்படும் எனவும் தெரிவித்தார்.
யார் பொதுச்செயலாளர்கள் என்ற முடிவை அடிமட்ட தொண்டர்களே எடுப்பார்கள் எனவும் அதற்கான தேதி விரைவில் வெளியிடபடும் எனவும் கூறினார்.
கழக சொத்து பாதுகாப்பு குழு விரைவில் அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
