Asianet News TamilAsianet News Tamil

புது சிக்கலில் சிக்கும் டிடிவி...? வசமாக கோர்த்துவிட்ட திமுக...!

Marudhunakash has filed a complaint against DMK candidates for election expenses.
Marudhunakash has filed a complaint against DMK candidates for election expenses.
Author
First Published Jan 19, 2018, 4:16 PM IST


ஆர்.கே.நகர் தேர்தலில் செலவிடப்பட வேண்டிய ரூ.28 லட்சத்தை விட, கூடுதல் பணத்தை செலவு செய்திருப்பதாக தேர்தல் செலவின பார்வையாளர்களிடம் திமுக சார்பில் போட்டியிட்ட மருதுகணேஷ் புகார் அளித்துள்ளார். 

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அவரது தொகுதியான ஆர்.கே.நகர் காலி இடமாக அறிவிக்கப்பட்டது. 

இதைதொடர்ந்து சில நாட்களில் அந்த தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அப்போது எடப்பாடி அணி சார்பில் டிடிவியும் ஒபிஎஸ் அணி சார்பில் மதுசூதனனும் களமிறங்கினர். 

ஆனால் டிடிவி தரப்பிடம் இருந்து பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக புகார் வந்ததையடுத்து தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. 

இதையடுத்து மீண்டும் சில நாட்கள் கழித்து எடப்பாடியும் ஒபிஎஸ்சும் ஒன்றாக இணைந்ததால் மீண்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டது. 

அப்போது இபிஎஸ் ஒபிஎஸ் தரப்பில் மதுசூதனனும், டிடிவி சுயேட்சையாகவும் திமுக சார்பில் மருதுகணேஷும் வேட்பாளர்களாக களமிறங்கினர். 

ஆர்.கே நகர் இடைதேர்தலில்,டிடிவி தினகரன் பெரும்பான்மையான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

அவரது வெற்றி குறித்து, பல்வேறு அரசியல் கட்சிகள், ஆர்.கே நகர் மக்களுக்கு பணம்  கொடுத்து தான் டிடிவி தினகரன் வெற்றி பெற்றார் எனவும் குற்றம் சாட்டினர். இதற்கு தினகரன் மறுப்பு தெரிவித்து விளக்கம் அளித்து வந்தார்.

இந்நிலையில், தற்போது திமுக சார்பில் போட்டியிட்ட மருதுகணேஷ் தேர்தல் ஆணையத்தில் புது புகார் ஒன்றை கொடுத்து டிடிவி தரப்புக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளார். 

அதில், ஆர்.கே.நகர் தேர்தலில் செலவிடப்பட வேண்டிய ரூ.28 லட்சத்தை விட, கூடுதல் பணத்தை செலவு செய்திருப்பதாக தேர்தல் செலவின பார்வையாளர்களிடம் புகார் அளித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios