புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் 2 தமிழக வீரர்களும் உயிரிழந்த நிலையில், ஒருவருக்கு மட்டும் பாமக நிறுவனர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

.

காஷ்மீர், புல்வாமா மாவட்டத்தில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில், 49-க்கும் மேற்பட்ட பாதுகாப்புப்படை வீரர்கள் வீரமரணமடைந்தனர். இந்த சம்பவம் இந்தியர்களின் இதயங்களை உலுக்கியது. இந்த தாக்குதலுக்கு உலகின் பல்வேறு நாடுகளும் தங்களின் கண்டனங்களைத் தெரிவிப்பதோடு இந்தியாவிற்கு ஆதவரை தெரிவித்து வருகின்றன.

இந்த தாக்குதலில் வீர மரணமடைந்த வீரர்களின் உடல்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. தமிழகத்தை சேர்ந்த தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள சவலப்பேரி கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன், அரியலூர் மாவட்டம், கார்குடியைச் சேர்ந்த சிவசந்திரன் ஆகிய இரண்டு தமிழக வீரர்களும் இதில் அடக்கம்.


இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், அரியலூரைச் சேர்ந்த சிவசந்திரனின் பெயரை மட்டும் குறிப்பிட்டு இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், புலவாமா மாவட்டத்தில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் வீரச்சாவடைந்த  அரியலூர் மாவட்டம் கார்குடியைச் சேர்ந்த வீரர் சிவச்சந்திரனுக்கு வீரவணக்கம். தாயகத்தைக் காக்கும் பணியில் நீ செய்த தியாகத்தை ஒட்டுமொத்த இந்தியாவும் போற்றும்!’’ எனப் பதிவிட்டுள்ளார்.

 

இது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. தனது சாதி வீரருக்கு மட்டும் பதிவிட்டுள்ளதாக நெட்டிசன்களின் குமைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார் ராமதாஸ்.  ’’ஏன் இன்னொருத்துருக்கும் இரங்கல் தெரிவிச்சா சாதி சங்கத்துல இருந்து விலக்கி வச்சிடுவாங்களா’’ இறந்தது ’’இரண்டு பேர் இதில் கூடவா சாதி பாசம்’’ ’’மொத்தமா 40 பேர் உயிர் தியாகம் செய்திருக்கிறார்கள். தமிழகத்தில் இரண்டு வீரர்கள் உயிரிழந்திருக்க, இவர் அவர் சாதி பெல்ட்டில் இறந்தவருக்கு மட்டும் இரங்கல் தெரிவித்து இருக்கிறார்’’ என அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.