நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.விற்கு தந்த வெற்றியை, சட்டமன்ற தேர்தலிலும் தந்தால்தான் தமிழக மக்களுக்கு விடிவு என்பது கிடைக்கும் என்றுமு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

திருப்பூரில் முன்னாள் அமைச்சர் வெள்ளகோவில் சாமிநாதன் இல்ல திருமண விழாவில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்து பேசியதாவது-  முன்னாள் அமைச்சர் மற்றும் திமுக மாவட்ட செயலாளர் வெள்ளக்கோவில் சாமிநாதனின் குடும்ப திருமணவிழா திருப்பூரில் இன்று நடைபெற்றது. இந்த திருமண விழாவில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினால். பின்னர், அவர் பேசுகையில் 1967-ம் ஆண்டு தி.மு.க.அரியணை ஏறிய பிறகு தான் சீர்திருத்த திருமணங்களுக்கு சட்ட வடிவம் கொடுக்கப்பட்டது. பொறுத்தார் பூமி ஆள்வார். நாம் இப்போது பொறுத்து கொண்டிருக்கிறோம்.

திமுகவில் குடும்ப அரசியல் நடப்பது உண்மைதான். நானும் இப்போது அழுத்தம் திருத்தமாக சொல்கிறேன். தி.மு.க. ஒரு குடும்ப கட்சிதான். கட்சி நிகழ்ச்சிகள் அனைத்திலும், திமுகவினர் குடும்பத்தோடு வந்து வேலை பார்க்கின்றனர். இதனால் குடும்ப அரசியல் தான் நடக்கிறது என்றார். மேலும் இவர் பேசுகையில், சி.பி.ராதாகிருஷ்ணன் பேசும் போது நாங்கள் அவர்களை வீழ்த்தி விட்டோம் என்றார். நான் கூறுகிறேன், உங்களை வீழ்த்தவில்லை, தோற்கடித்து உள்ளோம். அதுவும் நாங்கள் தோற்கடிக்கவில்லை, மக்கள் தான் தோற்கடித்து உள்ளார்கள் என்றார். 

முதல்வர், வெளிநாடு பயணம் மேற்கொண்டுள்ளார். முதலீடுகளை கொண்டு வந்தால், அவருக்கு திமுக சார்பில் பாராட்டு விழா நடத்த தயார் என
மு.க.ஸ்டாலின் அதிரடியாக கூறியுள்ளார்.