தேனி மாவட்டம் மயிலாடும்பாறையில் நடக்கும் கட்சிக்காரரின் வீட்டு கலியாணத்தை தினகரன்தான் நடத்தி வைக்கிறார். இது அவங்க சொந்த விஷயம் தானே ஆனால், இந்த தனிப்பட்ட ஒரு விஷயத்திலும் தினகரன் அரசியல் செய்திருக்கிறார்.

திருமண விழாவுக்கு “தங்க தமிழ்ச்செல்வன் மூலமாக இந்தத் தினகரனை அழைத்திருக்கிறார்கள். திருமணம் எந்த நாளில் நடக்கிறது என்பதை கேட்டிருக்கிறார் தினகரன்.

மார்ச் 7ஆம் தேதி என்று சொன்னதும், ஒகே வருவதற்கு ஓகே சொல்லியிருக்கிறார் தினகரன். நான் கல்யாணத்திற்கு வரணும்னா நீங்க ஒருசில வேலைகளை செய்தாகனும்னு கல்யாண வீட்டுக்காரர்களுக்குச் சில இன்ஸ்ட்ரக்‌ஷன்களைக் கொடுத்திருக்கிறார்.

அது என்னன்னா? ‘பத்திரிகையில் என்னோட பெயர் மட்டும் இல்லை. நம்ம எம்.எல்.ஏ.க்கள் 18 பேரோட பெயரும் இருக்கணும். வாழ்த்தும் ஜனநாயகக் காவலர்கள் என்ற தலைப்பில் அவங்க பெயர் இருக்கணும். எல்லோருடைய பெயருக்குக் கீழேயும் சட்டமன்ற உறுப்பினர் என்பதும், அவங்க என்ன தொகுதி என்பதும் தவறாம வரணும்.

அப்படி ஒரு அழைப்பிதழ் ரெடி பண்ணிக் கொண்டு வாங்க என சொன்னாராம். தினகரன் சொன்னதைப் போலவே அழைப்பிதழ் ரெடியாகியிருக்கிறது.

நம்மளத்தான் நீக்கி வைத்திருக்கிறார்களே ஆனால் கல்யாண பத்திரிகையில், MLA என போடசொல்லியிருக்கிறார். தொகுதி பெயரையும் சேர்த்து போடச் சொன்னது எதனால் என யோசித்த தங்க தமிழ்ச்செல்வன் எதுவும் புரியாமல் தினகரனைப் பார்த்திருக்கிறார்.

‘எப்படியும் இந்தக் கல்யாணத்துக்கு முன்னாடி தீர்ப்பு வந்துடும். எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லாது என்று தீர்ப்பு நமக்கு சாதகமாகத்தான் வரப் போகுது. அதனால்தான் தைரியமாக எல்லா எம்.எல்.ஏ.க்களுக்கும் தொகுதியோடு சேர்த்து பெயரைப் போடச் சொன்னேன் என சொல்லியிருக்கிறார்.

எப்படியும் மார்ச் 7ஆம் தேதிக்கு முன்பாக தீர்ப்பு வந்து விடும் என்பதிலும், தீர்ப்பு தங்களுக்கு சாதகமாகத்தான் வரும் என்பதிலும் உறுதியாகவும், நம்பிக்கையாகவும் இருக்கிறார் தினகரன் அண்ட் சகாக்கள்.