katju twitter

மனிதர்களுக்கு பால் தரும் பசுக்கள் தாயைப் போன்றவை என்றும், அவற்றை தெய்வமாக மதிக்க வேண்டும் என்றும் பாஜக வினர் கூறி வருவதை விமர்சிக்கும் வகையில், மனிதனுக்கு மிருகங்கள் எப்படி தாயாக முடியும்? என உச்சநீதிமன்ற முன்னாள் நிதிபதி மார்கண்டேய கட்ஜு கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தியாவில் அவ்வப்போது தோன்றும் முக்கிய பிரச்சனைகள் குறித்து உச்சநீதிமன்ற முன்னாள் நிதிபதி மார்கண்டேய கட்ஜு, தனது கருத்துக்களை துணிச்சலாக தனது டுவிட்டர் மற்றும் முகநூல் பக்கத்தில் வெளியிடுவார்.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு பிரச்சனைக்கு ஆதரவாக மாணவர்கள் நடத்திய போராட்டங்களுக்கு கட்ஜு குரல் கொடுத்தார். சசிகலா முதலமைச்சராக பதவியேற்க முயற்சித்தபோது, அவருக்கு எதிராக குரல் கொடுத்தார். தற்போது பாஜக ஆளும் மாநிலங்கள் பசு வை கொண்டாடி வருவதை கிண்டல் செய்து தனது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.

பா.ஜ.க ஆளும் பல மாநிலங்களில் பசுவதை தடுப்புச் சட்டம் அமலில் உள்ளது. குறிப்பாக ராஜஸ்தான் மாநிலத்தில் பசுக்களை பராமரிப்பதற்காக தனித் துறை உருவாக்கப்பட்டு அதற்கு அமைச்சர் ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கெல்லாம் உச்ச கட்டமாக குஜராத் மாநிலத்தில் பசுக்களை கொல்பவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும் மனிதர்களுக்கு பால் தரும் பசு தாயைப் போன்றது என பா.ஜ.க.வினர் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மனிதனுக்கு ஓர் விலங்கு எப்படி தாயாக முடியும்? என உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆடு, எருது, ஒட்டகம் கூட நமக்கு பால் தருகிறது. அவைகளும் நமக்கு தாய் தானா? எனவும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

Markandey Katju‏ @mkatju11h11 hours ago

More

I regard those hu regard cow 'gomata' http://idiots.How  can animal be mother of human?We drink milkofgoat,buffalo,camel.R they 2 mata?

140 replies163 retweets353 likes

நாட்டில் பிரச்சனைக்குரிய நிகழ்வுகள் எது நடைபெற்றாலும் அது குறித்து கருத்துத் தெரிவித்து ,சர்ச்சையில் சிக்கி கொள்வார். தற்போது பசுக்கள் குறித்து கட்ஜு தெரிவித்துள்ள கருத்து மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.