Asianet News TamilAsianet News Tamil

விவசாயிகள் போராட்டத்தில் மாவோயிஸ்டுகள் ஊடுருவல்... மத்திய அமைச்சர் பரபரப்பு குற்றச்சாட்டு..!

விவசாயிகள் போராட்டம் 17வது நாளை எட்டியுள்ள நிலையில் போராட்டத்தில் மாவோயிஸ்டுகள் ஊடுருவியுள்ளதாக  மத்திய அமைச்சர் பரபரப்பு குற்றச்சாட்டை கிளப்பியுள்ளார்.

Maoists infiltrate farmers' struggle ... Union Minister charged with incitement
Author
Delhi, First Published Dec 12, 2020, 10:03 PM IST

விவசாயிகள் போராட்டம் 17வது நாளை எட்டியுள்ள நிலையில் போராட்டத்தில் மாவோயிஸ்டுகள் ஊடுருவியுள்ளதாக  மத்திய அமைச்சர் பரபரப்பு குற்றச்சாட்டை கிளப்பியுள்ளார்.

இதுகுறித்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பேசுகையில், ‘போராட்டத்தின் பின்னால் ஏதேனும் சக்தி இருக்கிறதா? என்று கேட்கிறீர்கள். மீடியாவின் கண்கள் கூர்மையானவை. அதைக் கண்டுபிடிக்க உங்களிடமே விட்டுவிடுகிறோம். முட்டுக்கட்டைகளை முடிவுக்கு கொண்டுவர விவசாயிகள் பேச்சுவார்த்தைக்கு தயாராக வேண்டும். அரசாங்கத்தின் கதவுகள் எப்போதும் பேச்சுவார்த்தைக்கு திறந்திருக்கும்’ என்றார்.Maoists infiltrate farmers' struggle ... Union Minister charged with incitement

முன்னதாக திக்ரி எல்லையில் நடந்த விவசாயிகள் போராட்டத்தில் உமர் காலித் மற்றும் சுதா பரத்வாஜ் போன்றோரை விடுதலை செய்ய வேண்டும் என்று சுவரொட்டிகள் வைத்து வலியுறுத்திய புகைப்படங்கள் வெளியானதை வைத்து அமைச்சர் பியூஸ் கோயல், விவசாயிகள் போராட்டத்தில் பின்னணியில் வேறு சக்திகள் உள்ளதாக குற்றம்சாட்டினார்.

ஆனால், அமைச்சரின் குற்றச்சாட்டுகளை விவசாய அமைப்பினர் மறுத்துள்ளனர். கடந்த 8ம் தேதி முழு அடைப்பு போராட்டத்தை தீவிரப்படுத்தியிருந்த நிலையில் டெல்லியின் முக்கிய நுழைவு வாயில் சாலைகளை விவசாயிகள் முடக்கி வருகின்றனர். ஏற்கெனவே உத்திரப் பிரதேசம் - டெல்லி நுழைவு வாயிலையும், அரியானா - டெல்லி நுழைவு வாயிலையும் விவசாயிகள் கடந்த ஒரு வாரமாக முடக்கியுள்ளனர். 

சுங்கச்சாவடிகளை கைப்பற்றி அதில் செல்லும் வாகனங்கள் கட்டணம் செலுத்தாமல் செல்ல அனுமதிக்கப்படும் என்று விவசாயிகள் அறிவித்ததால், இன்று உத்தரபிரதேசம் முழுவதும் டோல் பிளாசாவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து விவசாயிகள் வண்டிக்கட்டுக்கொண்டு டெல்லிக்கு படையெடுத்துள்ளனர்.Maoists infiltrate farmers' struggle ... Union Minister charged with incitement

சுமார் 1,200 டிராக்டர்களில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் டெல்லியை நோக்கி வந்து கொண்டுள்ளனர். சில இடங்களில் டோல் பிளாசாவை முற்றுகையிட்டு விவசாயிகள் கோஷமிட்டனர். அடுத்தடுத்த பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்ததால் போராட்டம் மீண்டும் தீவிரமடைந்து வருகிறது. இதனால், மத்திய அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மத்திய மந்திரி பியூஷ் கோயல் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது; விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு 24 மணி நேரமும் தயாராக உள்ளது.Maoists infiltrate farmers' struggle ... Union Minister charged with incitement

மாவோயிஸ்டுகள் மற்றும் நக்சலைட்டுகளின் பிடியில் இருந்து போராட்டம் விடுதலையானால் வேளாண் சட்டங்கள் நாட்டு நலனுக்காகவும், விவசாயிகளின் நலனுக்காகவுமே கொண்டுவரப்பட்டுள்ளது என்பதை விவசாயிகள் நிச்சயம் புரிந்துகொள்வார்கள். அதற்கு பின்னரும் விவசாயிகளுக்கு எதேனும் சந்தேகம் இருந்தால் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயாராக உள்ளோம். ஒரு கருத்தை கூறிவிட்டு உடனடியாக பேச்சுவார்த்தை மேடையில் இருந்து வெளியேறுவதால் எந்த தீர்வும் எட்டப்படாது. இதன் மூலம் போராட்டம் விவசாயிகளின் கை மீறி சென்றுவிட்டது போன்று தெரிகிறது. பெரும்பாலான விவசாயிகள் புதிய வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக உள்ளனர் என எனக்கு நம்பிக்கை உள்ளது. சில விவசாயிகளுக்கு வேளாண் சட்டங்கள் மீது சந்தேகங்கள் இருக்கலாம் அவை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்படும் என கூறினார்.

Follow Us:
Download App:
  • android
  • ios