Asianet News Tamil

ரிசல்ட் நேரத்தில் பரபரப்பு... பலகோடி ரூபாய் மரகத லிங்கம் மாயம்... மதுரையில் ’மதுரம்’ செய்த கோல்மால்கள்..!

லஞ்ச ஒழிப்பு போலிசுக்கு மாற்ற பட்ட போது அது சம்பந்தமான ஆவணங்கள் மாயமாகி விட்டதாக கூறிய குற்றசாட்டு என பல குற்ற சாட்டுகள் மதுரம் மீது கரையாக படிந்துள்ளன.

Many crores of emerald lingam magic ... crime in Madurai
Author
Madurai, First Published Apr 29, 2021, 5:05 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

லஞ்ச புகாரில் சிக்கிய மதுரை மாநகராட்சி முன்னாள் நகர் பொறியாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கவர்னர் மற்றும் கலெக்டரிடம் வழக்கறிஞர் ஒருவர் கொடுத்த புகாரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மதுரை, அண்ணாநகரை சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார். இவர் தமிழக ஆளுநரிடம் அளித்த புகார் மனுவில், ’’மதுரை மாநகராட்சியில் நகர் பொறியாளறாக பணி புரிந்தவர் மதுரம். தற்போது ஈரோடு மாநகராட்சியில் நகர் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவர் மதுரை மாநகராட்சியில் உதவி நிர்வாக பொறியாளராக பணி செய்த காலத்தில் ரோபோ வாகனம் வாங்கியதில் முறைகேடு, அலுவல் நிமித்தமாக கோவா மாநிலத்திற்கு விமான டிக்கெட் எடுத்து விட்டு, எவ்வித காரணங்களும் கூறாமல், கோவாவிற்கும் செல்லாமல் மதுரை மாநகராட்சி நிர்வாகத்திற்கு இழப்பு ஏற்படுத்தியது, மதுரை மாநகராட்சி ஊர்திகளுக்கு உரிய காலத்திற்குள் தகுதி சான்றிதழ் பெறப்படாமல் வாகன பதிவை வேண்டுமென்றே கால தாமதம் செய்ததால் மாநகராட்சிக்கு ஏற்பட்ட ஆறு லட்சம் ரூபாய் பண இழப்பு.

நகர் பொறியாளராக பணிபுரிவதற்கு முன் உதவி பொறியாளர், செயற்பொறியாளராக பணிபுரிந்த போது அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் சஸ்பெண்ட்டிற்கு காரணமாகியுள்ளன. உதவி பொறியாளர்களை செயற்பொறியாளர்களாக பதவி உயர்வு அளித்த போது சீனியாரிட்டி பட்டியல்களை மறைத்தும் முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும் இரண்டு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

வாகன தரக் கட்டுப்பாடு பதிவேடு சரியான முறையில் பராமரிக்க படாதது, பணி ஒருங்கிணைப்பு மற்றும் பணி மாண்பின்மை குறித்த குற்றச்சாட்டு, இருபத்து ஐந்து கோடி மதிப்புள்ள மதுரை, மாட்டு தாவணி பேருந்து நிலைய கட்டுமான பணிக்கு மொத்தமாக டெண்டர் விட்டால் மேலிட அனுமதி பெற வேண்டும் என்பதாலும், தான் மட்டும் கமிஷன் தொகை பெற வேண்டுமென்பதற்காக திட்டமிட்டு இருபத்து ஆறு டெண்டர்களாக பிரித்து ஏலம் விட்ட ஊழல் குற்றசாட்டு, மதுரை எல்லீஸ் நகரில் வீட்டு வசதி வாரியத்தால் கட்ட பட்ட 161 வீடுகளில் முறைகேடுகள் நடந்ததால் விசாரணை லஞ்ச ஒழிப்பு போலிசுக்கு மாற்ற பட்ட போது அது சம்பந்தமான ஆவணங்கள் மாயமாகி விட்டதாக கூறிய குற்றசாட்டு என பல குற்ற சாட்டுகள் மதுரம் மீது கரையாக படிந்துள்ளன.

இது குறித்து உயர் மட்ட விசாரணைகள் நடந்து கொண்டு இருக்கிறது. இவைகள் தொடர்பான வழக்குகளால் மதுரை உயர் நீதிமன்றம் மதுரத்தை அதிகாரம் இல்லாத (Non Sensitive Post ) பதவியில் அமர்த்த உத்திரவிட்டது. மேலும், மதுரை மாநகராட்சியில் பல கோடி ருபாய் மதிப்புள்ள மரகத லிங்கம் மாயமானது சம்பந்தமாக சி.பி.ஐ. விசாரணை கோரி உயர்நீதிமன்றதில் நான் தாக்கல் செய்த வழக்கில் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கிய மதுரம் என்பவரை விசாரணை குழுவில் நியமிக்க கூடாதென உயர் நீதிமன்றம் விசாரணையில் நான் தெரிவித்து உள்ளேன்.

ஆனால், உயர் நீதிமன்றத்தின் உத்தரவை முழுவதும் மீறி மதுரம், ஈரோடு மாநகராட்சி நகர் பொறியாளராக ஏற்கனவே பார்த்து வந்த அதே அதிகாரம் மிக்க பணியில் குறுக்கு வழியில் நியமிக்கப்பட்டுள்ளார். இது முற்றிலும் சட்ட விரோதமானது. இந்த நியமனம் அவர் மென்மேலும் ஊழல் செய்ய வழி வகுக்கும். எனவே ஆறு வருடங்களாக நிலுவையில் இருக்கும் மதுரம் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விரைவில் விசாரித்து அவரை பணி நீக்கம் செய்து உரிய தண்டனை பெற்று தரவும், அதுவரை அவரை உயர் நீதிமன்றம் உத்திரவுப்படி அதிகாரமில்லாத பணியில் நியமிக்க பொது நலன் கருதி கேட்டு கொள்கிறேன்’’ எனத் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios