முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் உள்ளது நீதிமன்றமும் பத்திரிக்கைகளும் அவரது மரணம் குறித்து விசாரித்து உண்மையை வெளிக்கொணர வேண்டும் என்று நடிகர் மன்சூர் அலி கான் வலியுறுத்தியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மன்சூர் அலி காண முதல்வர் ஜெயலலிதாவுக்கு சாதாரண காய்ச்சல் என்றுதானே மருத்துவமனையில் அனுமதித்தார்கள்.

ஆனால் அவருக்கு எப்படி இதனை நோய் வந்தது அவருக்கு என்ன சிகிச்சை அளித்தார்கள். அவரை பார்க்க ஏன் யாரயுமே அனுமதிக்கவில்லை என சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

அப்போல்லோ மருத்துவமனையிலிருந்து அறிக்கையை மட்டும் ஏன் வெளியிட்டார்கள் என்றும் வினா எழுப்பினார். சசிகலாவின் குடும்பம் ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்து விட்டது என்றும் அவரை பாதுகாக்க வேண்டிய சசிகலாவே அவரது மரணத்திற்கும் காரணமாகி விட்டார் என்றும் மன்சூர் அலி கான் தெரிவித்தார்.

ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தது குறித்த footageகளை வெளியிட வேண்டும் என்றும் அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் மற்றும் நர்சுகளிடம் விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொணர வேண்டும் தெரிவித்தார்.

ஜெயலலிதாவை பார்க்க அவரது அண்ணன் மகளுக்காவது அனுமதி அளித்திருக்க வேண்டும்.இதுகுறித்து நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்த வேண்டும் என தெரிவித்தார்.

ஜெயலலிதா சசிகலா குடும்பத்திற்கு மட்டுமே சொந்தமானவர் அல்ல ஒட்டுமொத்த தமிழகத்திற்கே சொந்தம் என்பதால்தான் அவரது மரணத்தில் உள்ள மர்மம் குறித்து கேள்வி எழுப்புகிறேன் என்றார்.

ஜெயலலிதாவின் சொத்துக்களை நாட்டுடைமை ஆக வேண்டும் என்றும் மன்சூர் அலி கான் வேண்டுகோள் விடுத்தார்.

மீனவர் பிரச்சனை ,காவேரி பிரச்சனை,ஆகியவற்றில் ஒரு போராளியாக ஜெயலலிதாவின் மறைவு தமிழகத்தின் ஈடு செய்யப்பட முடியாத இழப்பு என்றும் அவர் கூறினார்.