திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட நடிகர் மன்சூர் அலிகான் மாவட்ட ஆட்சியரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

நாம் தமிழர் கட்சி சார்பில் திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் நடிகர் மன்சூர் அலிகான் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். திண்டுக்கல் தொகுதியில் தான் வெற்றி பெற்றால், துண்டிக்கப்பட்ட கண்மாய்கள் சீர் செய்யப்பட்டு விவசாயிகளின் பயன்பாட்டுக்கு திறந்துவிடப்படும் என்றும், நிலக்கோட்டை பகுதியில் வாசனை திரவிய தொழிற்சாலை அமைக்கப்படும் என்றும் மன்சூர் அலிகான் உறுதி அளித்து வருகிறார். 

கடந்த ஒருமாதகாலமாக திண்டுக்கல் மாவட்ட மக்களை சந்தித்துப் பேசி வரும் அவர், தனது வழக்கமான அனல் பறக்கும் பேச்சால் திண்டுக்கல்லை கலக்கி வருகிறார். நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி கரும்பு சின்னம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் மார்க்கெட்டுக்கு சென்று விவசாயிகளை சந்திப்பது, அவர்களுடன் சேர்ந்து விற்பனை செய்வது, பச்சை காய்கறிகளை உண்பது என வித்தியாசமான முறையில் தேர்தல் பிரசாரத்தில் மன்சூர் அலிகான் ஈடுபட்டு வருகிறார். 

இந்நிலையில் நடிகர் மன்சூர் அலிகான் மாவட்ட ஆட்சியரிடம் இன்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.