Asianet News TamilAsianet News Tamil

அதிமுகவுடன் 2 தொகுதிகளில் மல்லுக்கட்டும் மமக கட்சி... ஜவாஹிருல்லாவின் ஜாலம் பலிக்குமா?

திமுக கூட்டணியில் உள்ள மனிதநேய மக்கள் கட்சி போட்டியிடும் 2 தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், மணப்பாறை, பாபநாசம் ஆகிய 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Manithaneya Makkal Katchi contesting in 2 constituencies AIADMK
Author
Tamil Nadu, First Published Mar 11, 2021, 3:31 PM IST

திமுக கூட்டணியில் உள்ள மனிதநேய மக்கள் கட்சி போட்டியிடும் 2 தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், மணப்பாறை, பாபநாசம் ஆகிய 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. திமுக கூட்டணியில் ஜவாஹிருல்லாவின் மனிதநேய மக்கள் கட்சி 2 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில், ஒரு தொகுதியில் உதயசூரியன் சின்னத்திலும், மற்றொரு தொகுதியில் தனிச்சின்னத்தில் போட்டியிடுவதெனவும் ஒப்பந்தம் கையெழுத்தானது.

Manithaneya Makkal Katchi contesting in 2 constituencies AIADMK

இதையடுத்து, எந்தெந்த தொகுதிகளில் போட்டி என்பது குறித்து இரு கட்சிகளும் ஆலோசனை நடத்தின. இந்நிலையில், மனிதநேய மக்கள் கட்சி, தஞ்சை மாவட்டம் பாபநாசம், திருச்சி மாவட்டம் மணப்பாறை தொகுதிகளில் போட்டியிடுவதென முடிவு செய்யப்பட்டது. அதற்கான தொகுதி ஒப்பந்தத்தில் மு.க.ஸ்டாலினும், ஜவாஹிருல்லாவும் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

Manithaneya Makkal Katchi contesting in 2 constituencies AIADMK

இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஜவாஹிருல்லா;- தலைமை நிர்வாக குழு விரைவில் கூடி வேட்பாளர்கள் யார் என்பதை அறிவிப்பார்கள். திருப்திகரமான தொகுதிகள் கிடைத்திருக்கின்றன. கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளின் வேட்பாளர்களும் அமோக வெற்றி பெற்று எதிர்க்கட்சி இல்லாத புதிய வரலாறு இம்முறை படைக்கப்படும் என்றார்.

மணப்பாறை தொகுதியில் அதிமுக சார்பாக தற்போதைய எம்எல்ஏ இரா.சந்திரசேகரும், பாபநாசம் தொகுதியில் பாபநாசம் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் கோபிநாதனும் போட்டியிடுகின்றனர். எனவே, இரு தொகுதிகளிலும் அதிமுக - மமக இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios