பாஜகவுடன் ஏற்பட்ட கூடா நட்பால் அதிமுகவிற்கு அவலநிலை!எம்.ஜி.ஆர்,ஜெயலலிதா கட்சிக்கா இந்த நிலை -ஜவாஹிருல்லா வேதனை

பழங்குடியின பெண்ணை குடியரசுத் தலைவர் வேட்பாளராக ஆக்கிவிட்டால் அவர்கள் வாழ்வியல் மற்றும் அடிப்படை உரிமைகள் உள்ளிட்டவற்றை செய்து கொடுத்துவிட்டதாக பிம்பத்தை ஏற்படுத்த பாஜக முயற்சிக்கின்றனர் என மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
 

manitha neya makkal party  has said that the AIADMK is in danger due to its misguided alliance with the BJP

மனித உரிமை ஆர்வலர்கள் கைது 

மதுரை அவனியாபுரம் பகுதியில் மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகியின் இல்லத் திருமண விழாவில்  அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா கலந்து கொண்டார். இதனை தொடர்ந்து செய்தியாளர்ளிடம் பேசிய அவர், 2002ஆம் ஆண்டு குஜராத் கலவரம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்களுக்கு மனித உரிமை அடிப்படையில் உதவிகள் செய்த கீஸ்டா செட்டில் வால்டு உள்ளிட்டோர் பாசிசப் போக்குடன் கைது செய்யப்பட்டுள்ளனர். மனித உரிமை ஆர்வலர்கள் மீதான இந்தத் தாக்குதல் கண்டிக்கத்தக்கது. ஒன்றிய உள்துறை அமைச்சகத்தை கண்டித்து விரைவில் போராட்டம் நடத்த உள்ளோம். குஜராத் கலவரம் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் விசாரணையை அன்றைய காங்கிரஸ் அரசு இன்றைய பிஜேபி போல செய்திருந்தால் பாஜக ஆட்சிக்கு வந்திருக்க முடியாது. இன்றைக்கு சில விவகாரங்களில் நீதிமன்றத்தில் ஒருசாரார் ஒத்து ஊதுவது வேதனையாக உள்ளதாக குறிப்பிட்டார். 

தேமுதிக தலைவர் ஆகிறாரா விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் ? வெளியான அதிர்ச்சி தகவல் !

manitha neya makkal party  has said that the AIADMK is in danger due to its misguided alliance with the BJP

அமித்ஷா கையில் ரத்தக்கறை

குஜராத் படுகொலையின் ரத்தக் கறைகள் மோடி மற்றும் அமித் ஷா கையில் தற்போதும் உறைந்துள்ளது.குடியரசுத் தலைவர் வேட்பாளராக திரவுபதி நியமிக்கப்பட்டது குறித்த கேள்விக்கு, பாஜக ஆட்சி என்றால் காட்சிப்பொருள் என அர்த்தம்.காட்சிப் பொருள்களாக சிலவற்றை காட்டிவிட்டு தங்கள் கொடுங்கோன்மையை காட்டுவதுதான் பாஜகவின் திட்டம். பழங்குடியின பெண்ணை குடியரசுத் தலைவர் வேட்பாளராக ஆக்கிவிட்டால் அவர்கள் வாழ்வியல் மற்றும் அடிப்படை உரிமைகள் உள்ளிட்டவற்றை செய்து கொடுத்துவிட்டதாக பிம்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்.

அதிமுகவுக்கு புதிய சிக்கல்.. உள்ளாட்சி இடைத்தேர்தல் படிவத்தில் கையெழுத்திடுவது யார்.? குழப்பத்தில் ர.ரக்கள்!

manitha neya makkal party  has said that the AIADMK is in danger due to its misguided alliance with the BJP

அதிமுகவிற்கா இந்த அவல நிலை..?

வட இந்தியா மற்றும் ஜார்கண்ட் பீகார் போன்ற மாநிலங்களில் பழங்குடியின மக்களின் உரிமைகள் பறிக்கப்படுகிறது. மேனாமினுக்கி தனமாக குடியரசுத் தலைவர் வேட்பாளராக பழங்குடியினப் பெண் நியமிக்கப்பட்டுள்ள ஒரு நாடக காட்சியை பாஜக காட்டிக்கொண்டு உள்ளது.அதிமுகவில் தற்போது நிலவும் பிரச்சனை குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், இது அதிமுகவின் உட்கட்சி விவகாரம். பாஜகவோடு கூடா நட்பு வைத்ததால் எம்ஜிஆர் ஜெயலலிதா உருவாக்கிய கட்சிக்கு  இத்தகைய அவல நிலைக்கு தள்ளி விட்டதாக தெரிவித்தார். தற்போது நாட்டில் வேலையின்மை தலைவிரித்து ஆடுகிறது. லட்சக்கணக்கில் வேலையை தருவோம், 15 லட்சம் வங்கி கணக்கில் போடுவோம் என்ற வாக்குறுதி போலவும், எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல அக்னிபாத் திட்டம் என்கிற ஒன்றை கொண்டு வந்துள்ளனர். ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவின் வன்முறையை கட்டவிழ்த்து விட கொண்டுவரப்பட்ட திட்டம் தான் அக்னிபாத் திட்டம். 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில்  சர்வாதிகாரிகள் வெல்ல போவதில்லை ஜனநாயகம் வெல்லும் பாஜக நிச்சயம் வெல்ல முடியாது என கூறினார்.

இதையும் படியுங்கள்

குடியரசு தலைவர் வேட்பாளர் பெயரை பாஜக அறிவித்ததும் முதலமைச்சருக்கு காய்ச்சல் வந்துவிட்டது- அண்ணாமலை கிண்டல்
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios